Skip to main content

Posts

Showing posts from November, 2013

நற்படிப்புக்காக செபம்

நற்படிப்புக்காக செபம் சகலவிதமான ஞாயானத்துக்கும் , ஊற்றும் இருப்பிடமானவரே, /உம்மை நன்றியோடு புகழ்கின்றோம் . /தெய்வ பயமே ஞானத்தின் தொடக்கம், விவேகமே தூயவர்களின் அறிவு என்றும்/ ஆண்டவரில் உன் இன்பத்தைத் தேடு /அப்போது /உன் நெஞ்சம் நாடுவதை அவர் உனக்குத் தருவார் என்றும் /நாங்கள் வேதாகமத்தில் வாசிக்கிறோம் . /நாங்கள் ஒவ்வொருவரும் /ஞானத்திலும் /அறிவிலும் சிறந்து/பக்தியும் விசுவாசமும் உள்ள வாழ்க்கை நடத்தும் பொருட்டு எங்களை உம் கண்களுக்கு முன்பாக //மேன்மை மிக்கவர்களாக . /மதிப்புக்குரியவர்களாக படைத்து /எங்கள் ஒவ்வொருவருக்கும் ஞானமுள்ள இருதயத்தைக் கொடுத்திருக்கிறீர். /எங்களுடைய அறியாமையாலும் /பலவீனத்தாலும் /ஞாபகக் குறைவினாலும் சந்தர்ப்ப சூழ்நிலையாலும் /நாங்கள் ஞானத்திலும் அறிவிலும் /குறைவு பட்டவர்களாகவே வாழ்கிறோம்.

சுருக்கமான காலை வழிபாடு; விரிவான மாலை வழிபாடு-பரிசுத்த ஆவியை நோக்கி

சுருக்கமான காலை வழிபாடு என் இறைவா, உம்மை நான் வணங்கித் தொழுகிறேன். என் முழு மனதோடு உம்மை அன்பு செய்கிறேன். என்னைப் படைத்துக் கிறிஸ்துவனாக்கிக் கடந்த இரவில் காப்பாற்றியதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். இந்நாளின் செயல்களையெல்லாம் உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன். உமது திருவுளத்திற்கு ஏற்றவாறு அடியேன் நடக்க அருள் புரிவீராக. உம் மேன்மைக்காக என்னைப் பாவத்திலிருந்தும் ஒவ்வொரு தீமையிலிருந்தும் காப்பீராக. என்னிடமும் என் அன்புக்குரிய அனைவரிடமும் உம் திருவருள் இருப்பதாக. ஆமென். விரிவான மாலை வழிபாடு- பரிசுத்த ஆவியை நோக்கி தூய ஆவியே, எழுந்தருள்வீர், வானின்றுமது பேரொளியின் அருட்சுடர் எம்மீ தனுப்பிடுவீர். எளியவர் தந்தாய், வந்தருள்வீர், நன்கொடை வள்ளலே, வந்தருள்வீர், இருதய ஒளியே வந்தருள்வீர்.   உன்னத ஆறுத லானவரே, ஆன்ம இனிய விருந்தினரே, இனிய தன்மையும் தருபவரே,   உழைப்பில் களைப்பைத் தீர்ப்பவரே, வெம்மை தணிக்கும் குளிர்நிழலே, அழுகையில் ஆறுத லானவரே,   உன்னத பேரின்ப ஒளியே, உம்மை விசுவசிப் போருடைய நெஞ்சின் ஆழம் நிரப்பிடுவீர்.   உமத...

மன்றாடுதல் ஜெபம்

மன் றாடுதல்  ஜெபம் கடவுளின் பரிசுத்த ஊழியர்களுக்காக - பரிசுத்த ஆவியே அவர்களை உறுதிப்படுத்தும்படி மன்றாடுகிறோம். நாட்டு தலைவர்களுக்காக - பரிசுத்த ஆவியே அவர்களை நேர்மையுள்ளவர்களாக விளங்கும்படி மன்றாடுகிறோம். துன்புறும் ஏழைகளுக்காக - பரிசுத்த ஆவியே அவர்களை செல்வர்களாக்கும்படி மன்றாடுகிறோம். கொடிய பணக்காரர்களுக்காக - பரிசுத்த ஆவியே அவர்களை பணிவுள்ளவர்களாக் ஆகும்படி மன்றாடுகிறோம். கர்ப்பிணிப் பெண்களுக்காக - பரிசுத்த ஆவியே அவர்களை ஆறுதல்படுத்தும்படி மன்றாடுகிறோம். நோயாளிகள், மரணத் தறுவாயில் உள்ளோருக்காக - பரிசுத்த ஆவியே அவர்களை ஆறுதல்படுத்தும்படி மன்றாடுகிறோம். வேலையில்லாதவர்களுக்காக - பரிசுத்த ஆவியே அவர்களை தேற்றும்படி மன்றாடுகிறோம். காணாமல்போன ஆட்களுக்காக - பரிசுத்த ஆவியே அவர்கள் தங்கள் இல்லத்திற்கு திரும்ப வழிகாட்டும்படி மன்றாடுகிறோம். உள்ளம் உடைந்தவர்களுக்காக - பரிசுத்த ஆவியே அவர்களை குணப்படுத்தும்படி மன்றாடுகிறோம்.

ஒப்புக்கொடுத்தல் ஜெபம்

ஒப்புக்கொடுத் தல்  ஜெபம் தூய ஆவியானவரே, எங்களை வழிநடத்தும்படி, எங்கள் வாழ்வு முழுவதையும் உமக்கு ஒப்புக்கொடுக்கிறோம். எங்களுக்குள்ளே ஜீவித்து இறையன்பின் அற்புதங்களை எங்கள் வழியாக வெளிப்படுத்தும்.

பெற்றோரின் செபம்

பெற்றோரின் செபம்  மனுமக்களின் தந்தையே, இந்தப் பிள்ளைகளை எனக்குக் கொடுத்து என் பொறுப்பில் வைத்துக் காத்து உமக்கேற்ப நடக்கவும், அவர்களை நித்திய சீவியத்துக்குக் கொணடு வரவும் செய்தீரே . இந்தப் புனித ஊழியத்தையும், கண்காணிப்புப் பொறுப்பையும் நிறைவேற்ற எனக்கு உதவியாக உமது ஞான வரத்தை தந்தருளும் . நான் அவர்களுக்கு எதை கொடுக்கவேண்டியதோ அதையும், எதை நிறுத்த வேண்டியதோ அதையும் கற்பியும் . எப்போது கண்டிக்க வேண்டியதோ அப்போது கண்டிக்கவும், எப்போது அரவணைக்க வேண்டியதோ அப்போது அரவணைக்கவும் செய்வீராக . இன்னமும் சாந்த குணத்தில் என்னைப் பலப்படுத்தியருளும் .

துன்பவேளை மன்றாட்டு

துன்பவேளை மன்றாட்டு இனிய இயேசுவே ! மக்களிடையே வாழ்வதும், அவர்கள் மேல் உமது ஆசியை ஏராளமாகப் பொழிவதும் உமக்கு மிகப்பெரும் மகிழ்ச்சி . நம்பிக்கையோடு உம்மைநாடி வந்த பக்தர் அநேகர் வியப்புக்குரிய வரங்களை உம்மிடமிருந்து பெற்றுள்ளனர் . அவர்கள் கோரிய மன்றாட்டுக்களையும் அடைந்துள்ளனர் . உமது அற்புத திருச்சுரூபத்திற்கு முன் முழந்தாளிட்டு, என் இதயத்தை திறந்து , என் விண்ணப்பங்களையும், கோரிக்கைகளையும், ஏக்கங்களையும் . . . . . (தேவையை உறுதியோடு குறிப்பிடவும் ) உம்மிடம் கேட்கிறேன் . உமது விருப்பம் போல் எனக்கு ஆகட்டும் . உமது ஞானத்திற்கும், அன்பிற்கும் ஏற்ப, என் நன்மைக்காகவே எல்லாவற்றையும் நீர் செய்வீர் என்று நான் அறிவேன் . இத்துன்ப வேளையிலே எனக்கு ஆறுதலாக வந்து, மகிழ்ச்சியையும் தந்து கிருபை பாலிக்க வேண்டும் என்று குழந்தை இயேசுவே உம்மிடம் பணிவோடு கேட்கிறேன்

உணவருந்துமுன் ஜெபம்-உணவருந்திய பின் ஜெபம்

உணவருந்துமுன் ஜெபம்: சர்வேசுரா சுவாமி! என்னையும் உமதருளினால் நான் உண்ணப்போகும் இந்த உணவையும் எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துநாதருடைய திருமுகத்தைப் பார்த்து ஆசீர்வதித்தருளும் -ஆமென். உணவருந்திய பின் ஜெபம்: சதாகாலத்துக்கும் நித்தியருமாய் இராச்சிய பரிபாலனம் பண்ணுகிறவருமாயிருக்கிற சர்வ வல்லபமுள்ள இறைவா! தேவரிர் எனக்குத் தந்தருளின இந்த ஆகாரங்களுக்காகவும் தேவரிர்; எனக்குச் செய்துவருகிற சகல உபகாரங்களுக்காகவும் தேவரீருக்கு நன்றியறிந்த தோத்திரம் பண்ணுகிறேன். இப்பொழுதும் எப்போழுதும் ஆண்டவருடைய திரு நாமம் வாழ்த்தப்படக்கடவது. ஜெபிப்போமாக சர்வேசுரா சுவாமி! எங்களுக்கு உபகாரம் பண்ணுகிறவர்களுக்கெல்லாம் நித்திய ஜீவியத்தைக் கட்டளையிட்டருள அனுக்கிரகம் பண்ணியருளும் சுவாமி -ஆமென் மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாரக் கடவது –ஆமென்

மனம் வருந்துதல் ஜெபம்

மனம் வருந்துதல்  ஜெபம் அன்பின் பரிசுத்த ஆவியே - எங்கள் விரோத குணத்தை மன்னியும். நம்பிக்கையின் பரிசுத்த ஆவியே - எங்கள் சுய பரிதாபத்தை மன்னியும். விசுவாசத்தின் பரிசுத்த ஆவியே - எங்கள் சந்தேக புத்தியை மன்னியும். மகிழ்ச்சியின் பரிசுத்த ஆவியே - எங்கள் துயரமனதை மன்னியும். சமாதானத்தின் பரிசுத்த ஆவியே - எங்கள் ஆகங்காரத்தை மன்னியும். பொறுமையின் பரிசுத்த ஆவியே - எங்கள் முணுமுணுத்தலை மன்னியும். இரக்கத்தின் பரிசுத்த ஆவியே - எங்கள் கொடுரமான சிந்தனையை மன்னியும். நன்மைத்தனத்தின் பரிசுத்த ஆவியே - எங்கள் தீய செயலை மன்னியும். விசுவாசமுள்ள பரிசுத்த ஆவியே - எங்கள் சோம்பேறித்தனத்தை மன்னியும். தாழ்ச்சியின் பரிசுத்த ஆவியே - எங்கள் தற்பெருமையை மன்னியும். தன்னடக்கத்தின் பரிசுத்த ஆவியே - எங்கள் பேராசையை மன்னியும்.

தூய்மைக்காக இளைஞரின் மன்றாட்டு :

தூய்மைக்காக இளைஞரின் மன்றாட்டு :  எல்லாம் வல்லவரும், அனைத்தையும் காண்கிறவருமான இறைவா, என் ஆத்துமத்தை உமது திவ்விய இலட்சண சாயலாக உண்டாக்கினீரே, அதை நான் களங்கப்படுத்தாதபடி எனக்கு அனுக்கிரகம் செய்தருளும் . நமது ஆலயத்தை யாதாமொருமன் அசுசிப்படுத்தினால் அவனைச் சிதைப்போம் என்று திருவுளம்பற்றினீரே, சுவாமி ! உமது அருள் வாக்கின்படியே என் உடலே உமது தேவாலயமாயிற்று, இதிலே உமது திருவருளினால் தேவரீருடைய பரிசுத்த ஆவியார் உறைந்திடத் திருவுளம் கொண்டது மன்றி அநேக முறை உம்முடைய திருக்குமாரனுமாகி இயேசுநாதரும் தேவநற்கருணை வழியாக எழுந்தருளி வந்து இதனை அர்ச்சித்தருளினார் . ஆகையால் தூய்மையின் உருவான இறைவா, உமக்குச் சொந்தமாகிய இத்தேவாலயத்தில் தேவரீர் மிகுந்த அருவருப்புடனே வெறுக்கிற பாவ அக்கிரமங்களை வரவிடாதேயும் . தூய்மைக்கு விரோதமான ஓர் அர்ப்ப மாசும் என் ஆத்துமத்திலாவது உடலிலாவது உண்டாகாதபடி கிருபைசெய்தருளும் . என் திவ்விய இரட்சகரான இயேசுவே ! இந்த விலைமதியாத புண்ணியத்தை அனுசரிக்க உமது சிறப்பான உதவி வேண்டியிருக்கிறதினால், தூய்மையை விரும்புகிறவரும் கன்னியர்...

நோயுற்றோர் நலம்பெற செபம் -நோய் வேளை மன்றாட்டு

நோயுற்றோர் நலம்பெற செபம்  இடைவிடா சகாய அன்னையே! பனிமாதாவே இரக்கமுள்ள தாயே, நோயுற்றோரின் பிணிகளை உம் திருமகன் சுமந்துகொண்டார்; தன்னை விசுவாசத்தோடு நாடி வந்தோர்க்கு நலமளித்தார். இதோ நோயுற்றிருக்கும் எங்களை (பெயர்களை சொல்லவும்) கண்நோக்கியருள்ளும். எங்களுடைய பாவங்களையும் பலவீனத்தையும் பாராமல், திருசபையோரின் விசுவாசத்தையும் கண்ணுற்று எங்களுக்கு நலமளிக்க இறைவனை மன்றாடும். நாங்கள் பிணிகளை ஏற்ப்பது இறைவனின் திருவுளமானால் புருமையுடனும், மனமகிழ்வுடனும் ஏற்றுக்கொள்ள மனவுறுதியை பெர்றுதாரும். நோயில் நாங்கள் துவளும் போதும் உம்மைப்போலவே 'இதோ உமது அடிமை, உமது வார்த்தையின்படியே எனக்கு ஆகட்டும்' என்று இன்முகத்தோடு கூறி ஏற்றுக்கொள்ள இறைவனிடமிருந்து வரங்களை பெற்றுத் தந்தருளும். - ஆமென். நோய் வேளை மன்றாட்டு இரக்கமுள்ள குழந்தை இயேசுவே ! நோயாளிகளுக்கு நீர் காட்டிய கருணை எனக்குத் தெரியும் . இவ்வுலகிலே நீர் வாழ்ந்த போது, நோயாளிகளையும், அங்கம் குறைந்தவர்களையும் தீராத நோயால் துன்புற்றோரையும், உமது கனிவான கரத்தால் தொட்டு குணமாக்கினீர் .   இன்று...

பேய் ஓட்டுகிறதற்கு செபம் :

பேய் ஓட்டுகிறதற்கு செபம் :  இதோ ஆண்டவருடைய சிலுவை சத்துராதிகளாகிய நீங்கள் அகன்று போகக்கடவீர்கள் . அல்லேலூயா ! அல்லேலூயா ! அல்லேலூயா ! யூதா கோத்திரத்தின் சிங்கமும் தாவீதின் சந்ததியுமானவர் ஜெயங்கொண்டார் . அல்லேலூயா ! நரக வல்லமையை அடக்கின புனித அந்தோணியாரே ! இயேசு கிறிஸ்துநாதருக்கும் சத்திய வேதத்திற்கும் சத்துராதிகளாய் இருக்கிறவர்கள் எல்லோரையும் சிதறடிப்பதுமல்லாமல் துன்மார்க்கங்களையும் துர்க்குணங்களையும் நிர்மூலமாக்கும்படி உம்மை மன்றாடுகிறோம் . - ஆமென்

தாய்மை கொண்ட பெண்கள் செபம் :

தாய்மை கொண்ட பெண்கள் செபம் : கன்னியும் தாயுமான புனித மரியாளே ! நீர் இயேசு நாதரை உமது திருவயிற்றில் தாங்கிக் கொண்டிருந்ந நாளெல்லாம் ஆனந்த சந்தோஷத்தில் அமிழ்ந்திக் கடைசியாய் பேறுகாலமானபோது, வாக்குக்கெட்டாத உன்னத பரவசத்தில் திவ்விய பாலகனைப் பெற்றீரே ! அந்தப் புத்திக்கெட்டாத ஆனந்தத்தைப் பார்த்து என்பேரில் கிருபையாயிரும் . நானோ பாவத்தில் பிறந்து எல்லா உபத்திரவங்களுக்கும் உள்ளாயிருக்கிறேன் . ஏவைக்கு இட்ட ஆக்கினை என்பேரிலும் இருக்கிறது . ஆகையால் என் மிடிமையைப் பார்த்து என் பலவீனங்களின் பேரில் இரக்கமாயிருந்து, என் வயிற்றிலிருக்கிற சிசுவுக்கு யாதொரு பொல்லாப்புமின்றி, அதிக சிரமமின்றி ப் பிரசவிக்க அனுக்கிரகம் செய்தருளும் . மேலும் அந்தப் பாலகனுக்கு புத்தி சித்தம் மேன்மையுள்ளதாகி உமது திருக்குமாரனுடையவும், உம்முடையவும் பணியிலே நிலைக் கொண்டு, சிறப்புடன் வளர்ந்து, பேரின்ப பாக்கியத்தின் வழியிலே நடக்க உமது திருக்குமாரனை வேண்டிக்கொள்ளும் . -ஆமென் .

நல்ல வாழ்க்கைத் துணைக்காக செபம்

நல்ல வாழ்க்கைத் துணைக்காக செபம்  ஓ என் இயேசுவே, என் அன்பு சினேகிதிரே! எனது முழு நம்பிக்கையுடன் என் மனம் திறந்து, எனது எதிர்காலத்திற்காக உங்களை கெஞ்சி மன்றாடுகிறேன். எனக்கு ஒரு நல்ல வாழ்க்கை துணை அமைய, உங்களின் அருளையும் ஆசிரையும் என்மேல் பொழிந்தருளும். எனக்கு ஏற்ற ஒரு நல்ல வாழ்க்கை துணையை எனக்கு அனுப்பியருளும். என் அன்பு சினேகிதரே, என் வாழ்க்கை துணையாய் வருபவர் தங்களின் திரு இருதயத்தின் மேல் பற்றும் பக்தியும் உள்ளவராக இருக்க மன்றாடுகிறேன். எனது வாழ்க்கை துணை நேர்மையானவாராக, நம்பிக்கைக்கு உரியவராக, புனிதமானவாராக, பற்றுறுதியானவராக, உண்மையானவராக இருக்க உம்மை இறைஞ்சி மன்றாடுகிறேன். நாங்கள் இருவரும் ஓர் உடலாகவும் உயிராகவும் தன்னலமற்ற எண்ணத்தோடும் இருக்கும்படி எங்களை ஆசிர்வதியும். எங்களுக்கு நீங்கள் கொடுக்கும் பிள்ளைகளை நாங்கள் பொறுப்பான பெற்றோர்களாக வளர்க்க எங்களை ஆசிர்வதியும். நாங்கள் ஒருவருக்கொருவர் தன்னலமற்ற அன்போடும் பரிவோடும் வாழ அருள்புரியும். எங்களின் வருங்கால குடும்பம் தூய திருக்குடும்பத்தின் அடையாளமாக இருக்க மன்றாடுகிறே...

காணிக்கை ஜெபம்:

காணிக்கை ஜெபம்: இயேசுவின் திரு இருதயமே! நாங்கள் கட்டிக்கொள்ளும் துரோகங்களுக்குப் பரிகாரமாகவும் தேவரீர் திருப்பீடத்தில் ஓயாமல் உம்மைத்தானே பலியாக ஒப்புக்கொடுக்கும் சகல கருத்துக்களுக்காகவும், அடியேல் இன்று செய்யும் ஜெபங்களையும், கிரியைகளையும், படுந்துன்ப வருத்தங்களையும், தூய கன்னிமரியாயின் மாசில்லாத திரு இருதயத்தின் வழியாக உமக்கு ஒப்புக்கோடுக்கிறேன் சுவாமி. இந்த மாதத்திற்கும் இந்த நாளுக்கும் சபையாருக்கும் குறிக்கப்பட்ட சகல கருத்துக்களுக்காகவும் விசேஷமாய் அவைகளை ஒப்புக்கொடுக்கிறேன் சுவாமி -ஆமென். அத்தியந்த மகிமையுள்ள பரலோக இராசேஸ்வரியான பரிசுத்த தேவமாதாவே உம்முடைய திருபாதத்தை நாங்கள் நமஸ்கரித்து இந்தச் செபமாலைத் தியானத்தை உமக்குப் பாத காணிக்கையாக வைத்து ஒப்புக்கொடுக்கின்றோம். இதை நீரே கையேற்று உம்முடைய திருக்குமாரனிடத்திலே கையளித்து இதிலே நாங்கள் தியானித்த மறை நிகழ்ச்சிகளுடைய பலனை அடையவும் சுகிரேத போதனையின் படியே நடந்து இவ்வுலகத்திற் சகல விக்கினங்களும் நிவாரணமாகவும் பரலோகத்திலே உம்மோடே உம்முடைய திருக்குமாரனுடைய மோட்சமுக தரிசனையைக் க...

வேலை துவங்குமுன் ஜெபம்-வேலை முடிந்தபின் செபம்

வேலை துவங்குமுன் ஜெபம்: தூய ஆவியே தேவரீர் எழுந்தருளிவாரும். உம்முடைய விசுவாசிகளுடைய இருதயங்களை நிரப்பும். அவைகளில் சிநேக அக்கினியை மூட்டியருளும். உம்முடைய ஞானக் கதிர்களை வரவிடும். அதனால் உலகத்தின் முகத்தைப் புதுப்பிப்பீர். ஜெபிப்போமாக சர்வேசுரா சுவாமி! விசுவாசிகளுடைய இருதயங்களை பரிசுத்த ஆவியின் பிரகாசத்தால் படிப்பித்தருளினீரே. அந்த பரிசுத்த ஆவியினால் சரியானவைகளை உணரவும், அவருடைய ஆறுதலால் எப்பொழுதும் மகிழ்ந்திருக்கவும் அனுக்கிறகம் செய்தருளும். இவைகளையெல்லாம் எங்களாண்டவராகிய இயேசு கிறிஸ்துநாதருடைய திருமுகத்தைப் பார்த்து தந்தருளும் -ஆமென். வேலை முடிந்தபின் செபம்: சர்வேசுரனுடைய பரிசுத்த மாதாவே! இதோ உம்முடைய சரணமாக ஓடிவந்தோம். எங்கள் அவசரங்களிலும் நாங்கள் வேண்டிக்கொள்ளுகிறதற்கு நீர் பாராமுகமாயிராதேயும். ஆசீர்வதிக்கப்பட்டவளுமாய் மோட்சம் உடையவளுமாயிருக்கிற நித்திய கன்னிகையே சகலஆபத்துக்களிலேயும் நின்று எங்களை தற்காத்தருளும். -ஆமென்.

பரிசுத்த ஆவியின் செபம் புதிய மொழிபெயர்ப்பு:

பரிசுத்த ஆவியின் செபம் புதிய மொழிபெயர்ப்பு: தூய ஆவியே எழுந்தருள்வீர், வானின்று உமது பேரொளியின் அருட்சுடர் எம்மீது அனுப்பிடுவீர். எளியவர் தந்தாய் வந்தருள்வீர், நன்கொடை வல்லலே வந்தருள்வீர், இதய ஒளியே வந்தருள்வீர். உன்னத ஆறுத லானவரே, ஆன்ம இனிய விருந்தினரே, இனிய தன்மையும் தருபவரே. உழைப்பில் களைப்பைத் தீர்ப்பவரே, வேம்மைத் தணிக்கும் குளிர்நிழலே, அழுகையில் ஆறுத லானவரே. உன்னத பேரின்ப ஒளியே, உம்மை விசுவசிப் போருடைய நெஞ்சின் ஆழம் நிரப்பிடுவீர். உமதருள் ஆற்றல் இல்லாமல், உள்ளது மனிதனில் ஒன்றுமில்லை நல்லது அவனில் ஏதுமில்லை. மாசுொண்டதைக் கழுவிடுவீர். வரட்சி யுற்றதை நனைத்திடுவீர். காயப் பட்டதை ஆற்றிடுவீர். வணங்கா திருப்பதை வளைத்திடுவீர், குளிரானதை குளிர் போக்கிடுவீர், தவறிப் போனதை ஆண்டருள்வீர். இறைiவா உம்மை விசுவசித்து , உம்மை நம்பும் அடியார்க்கு, கொடைகள் ஏழும் ஈந்திடுவீர். புண்ணிய பலன்களை வழங்கிடுவீர், இறுதியில் மீட்பும் ஈந்திடுவீர், அழிவிலா இன்பம் அருள்வீரே. ஆமென்.

தொழிளாளர்களின் செபம்

தொழிளாளர்களின் செபம் அனுதின வேலைகளை ஒப்புக் கொடுக்கும் செபம்: தெய்வீகத் தொழிலாளியாகிய இயேசுவே, அடியேன் இன்று செய்யும் ஜெபங்களையும், தொழில்களையும், எனக்கு ஏற்படும் களைப்பு, ஆயாசம், துன்ப வருத்தங்கள் அனைத்தையும், தொழிலாளிகளின் மனந்திரும்புதலுக்காகவும், அர்ச்சிப்புக்காகவும் தேவரீருக்கு ஒப்புக்கொடுக்கிறேன். -ஆமென். இயேசுவின் திரு இருதயமே, உமது அரசு வருக ! நாசரேத்து அன்னையே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். தொழிலாளரின் மாதிரியாகிய புனித சூசையப்பரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். தொழிலாளிகளின் செபம்:  அனைத்தையும் படைத்துப் பராமரிக்கும் இறைவா, நெற்றி வியர்வை தரையில் விழ உழைக்க எமக்குப் பணித்தீரே ! நான் என் வேலைகளை விரும்பவும், அன்பு செய்யவும் அருள்வீராக. நேரத்தோடு வேலைக்குச் சென்று காலத்தையும் பொருளையும், பணத்தையும் வீணாக்காமல், நுணுக்கமான கவனத்துடன் உழைப்பேனாக. எப்பொழுதும் வேலையில் உற்சாகத்தோடும், உடன் ஊழியருடன் மரியாதையோடும், நிறுவனத்தார்க்குப் பிரமாணிக்கத்தோடும் நடந்து கொள்வேனாக. என் வேலையின் பயனால் என் வீடும், எமது தொழிலும், பொது மக்...

காவல் தூதரை நோக்கி செபம்:

காவல் தூதரை நோக்கி செபம்:  எனக்குக் காவலாய் இருக்கிற சர்வேசுரனுடைய சம்மனசானவரே ! தெய்வீக கிருபையால் உம்மிடத்தில் ஒப்புவிக்கப்பட்ட எனக்கு ஞான வெளிச்சம் கொடுத்து என்னைக் காத்து வழிநடத்தி ஆண்டருளும். -ஆமென்.

சுருக்கமான மனத்துயர் செபம்:

சுருக்கமான மனத்துயர் செபம்: என் இறைவனாகிய தந்தையே! நீர் நன்மை நிறைந்தவர், எனவே எல்லாவற்றிற்கும் மேலாக உம்மை நான் அன்பு செய்கிறேன். என் பாவங்களால் உமது அன்பை மறந்ததற்காக மனம் வருந்துகிறேன். உமது அருளுதவியால் இனிமேல் பாவம் செய்வதில்லையென்று உறுதி கூறுகிறன். ஆமென்.