Skip to main content

வேலை துவங்குமுன் ஜெபம்-வேலை முடிந்தபின் செபம்

வேலை துவங்குமுன் ஜெபம்:

தூய ஆவியே தேவரீர் எழுந்தருளிவாரும்.
உம்முடைய விசுவாசிகளுடைய இருதயங்களை நிரப்பும்.
அவைகளில் சிநேக அக்கினியை மூட்டியருளும்.
உம்முடைய ஞானக் கதிர்களை வரவிடும்.
அதனால் உலகத்தின் முகத்தைப் புதுப்பிப்பீர்.
ஜெபிப்போமாக சர்வேசுரா சுவாமி!
விசுவாசிகளுடைய இருதயங்களை பரிசுத்த
ஆவியின் பிரகாசத்தால் படிப்பித்தருளினீரே.
அந்த பரிசுத்த ஆவியினால் சரியானவைகளை உணரவும்,
அவருடைய ஆறுதலால் எப்பொழுதும்
மகிழ்ந்திருக்கவும் அனுக்கிறகம் செய்தருளும்.
இவைகளையெல்லாம் எங்களாண்டவராகிய இயேசு
கிறிஸ்துநாதருடைய திருமுகத்தைப் பார்த்து தந்தருளும் -ஆமென்.

வேலை முடிந்தபின் செபம்:


சர்வேசுரனுடைய பரிசுத்த மாதாவே!
இதோ உம்முடைய சரணமாக ஓடிவந்தோம்.
எங்கள் அவசரங்களிலும் நாங்கள்
வேண்டிக்கொள்ளுகிறதற்கு நீர் பாராமுகமாயிராதேயும்.
ஆசீர்வதிக்கப்பட்டவளுமாய் மோட்சம்
உடையவளுமாயிருக்கிற நித்திய கன்னிகையே
சகலஆபத்துக்களிலேயும் நின்று எங்களை தற்காத்தருளும். -ஆமென்.

Comments

  1. சகோதர சகோதரிகளே,
    அனைவருக்கும் மிக பயனாக இருக்கும் என கிறிஸ்துவில் நம்புகிறேன்.

    With Love in Jesus

    R.S.Allwin
    rsallwin@yahoo.com

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நோயுற்றோர் நலம்பெற செபம் -நோய் வேளை மன்றாட்டு

நோயுற்றோர் நலம்பெற செபம்  இடைவிடா சகாய அன்னையே! பனிமாதாவே இரக்கமுள்ள தாயே, நோயுற்றோரின் பிணிகளை உம் திருமகன் சுமந்துகொண்டார்; தன்னை விசுவாசத்தோடு நாடி வந்தோர்க்கு நலமளித்தார். இதோ நோயுற்றிருக்கும் எங்களை (பெயர்களை சொல்லவும்) கண்நோக்கியருள்ளும். எங்களுடைய பாவங்களையும் பலவீனத்தையும் பாராமல், திருசபையோரின் விசுவாசத்தையும் கண்ணுற்று எங்களுக்கு நலமளிக்க இறைவனை மன்றாடும். நாங்கள் பிணிகளை ஏற்ப்பது இறைவனின் திருவுளமானால் புருமையுடனும், மனமகிழ்வுடனும் ஏற்றுக்கொள்ள மனவுறுதியை பெர்றுதாரும். நோயில் நாங்கள் துவளும் போதும் உம்மைப்போலவே 'இதோ உமது அடிமை, உமது வார்த்தையின்படியே எனக்கு ஆகட்டும்' என்று இன்முகத்தோடு கூறி ஏற்றுக்கொள்ள இறைவனிடமிருந்து வரங்களை பெற்றுத் தந்தருளும். - ஆமென். நோய் வேளை மன்றாட்டு இரக்கமுள்ள குழந்தை இயேசுவே ! நோயாளிகளுக்கு நீர் காட்டிய கருணை எனக்குத் தெரியும் . இவ்வுலகிலே நீர் வாழ்ந்த போது, நோயாளிகளையும், அங்கம் குறைந்தவர்களையும் தீராத நோயால் துன்புற்றோரையும், உமது கனிவான கரத்தால் தொட்டு குணமாக்கினீர் .   இன்று...

சுருக்கமான மனத்துயர் செபம்:

சுருக்கமான மனத்துயர் செபம்: என் இறைவனாகிய தந்தையே! நீர் நன்மை நிறைந்தவர், எனவே எல்லாவற்றிற்கும் மேலாக உம்மை நான் அன்பு செய்கிறேன். என் பாவங்களால் உமது அன்பை மறந்ததற்காக மனம் வருந்துகிறேன். உமது அருளுதவியால் இனிமேல் பாவம் செய்வதில்லையென்று உறுதி கூறுகிறன். ஆமென்.

காணிக்கை ஜெபம்:

காணிக்கை ஜெபம்: இயேசுவின் திரு இருதயமே! நாங்கள் கட்டிக்கொள்ளும் துரோகங்களுக்குப் பரிகாரமாகவும் தேவரீர் திருப்பீடத்தில் ஓயாமல் உம்மைத்தானே பலியாக ஒப்புக்கொடுக்கும் சகல கருத்துக்களுக்காகவும், அடியேல் இன்று செய்யும் ஜெபங்களையும், கிரியைகளையும், படுந்துன்ப வருத்தங்களையும், தூய கன்னிமரியாயின் மாசில்லாத திரு இருதயத்தின் வழியாக உமக்கு ஒப்புக்கோடுக்கிறேன் சுவாமி. இந்த மாதத்திற்கும் இந்த நாளுக்கும் சபையாருக்கும் குறிக்கப்பட்ட சகல கருத்துக்களுக்காகவும் விசேஷமாய் அவைகளை ஒப்புக்கொடுக்கிறேன் சுவாமி -ஆமென். அத்தியந்த மகிமையுள்ள பரலோக இராசேஸ்வரியான பரிசுத்த தேவமாதாவே உம்முடைய திருபாதத்தை நாங்கள் நமஸ்கரித்து இந்தச் செபமாலைத் தியானத்தை உமக்குப் பாத காணிக்கையாக வைத்து ஒப்புக்கொடுக்கின்றோம். இதை நீரே கையேற்று உம்முடைய திருக்குமாரனிடத்திலே கையளித்து இதிலே நாங்கள் தியானித்த மறை நிகழ்ச்சிகளுடைய பலனை அடையவும் சுகிரேத போதனையின் படியே நடந்து இவ்வுலகத்திற் சகல விக்கினங்களும் நிவாரணமாகவும் பரலோகத்திலே உம்மோடே உம்முடைய திருக்குமாரனுடைய மோட்சமுக தரிசனையைக் க...