Skip to main content

Posts

Showing posts with the label ம வரிசை (ம-மா-மூ-மெ-மே)

மெய் ஜோதியாம் நல் மீட்பரே - Mei Jyothiyaam nal meetpare Lyrics

மெய் ஜோதியாம் நல் மீட்பரே 1. மெய் ஜோதியாம் நல் மீட்பரே, நீர் தங்கினால் ராவில்லையே; என் நெஞ்சுக்கும்மை மறைக்கும் மேகம் வராமல் காத்திடும்.   2. என்றைக்கும் மீட்பர் மார்பிலே, நான் சாய்வது பேரின்பமே; என்றாவலாய் நான் ராவிலும் சிந்தித்துத் தூங்க அருளும்.   3. என்னோடு தங்கும் பகலில், சுகியேன் நீர் இராவிடில்; என்னோடே தங்கும் ராவிலும் உம்மாலே அஞ்சேன் சாவிலும்.   4. இன்றைக்குத் திவ்விய அழைப்பை அசட்டை செய்த பாவியை தள்ளாமல் வல்ல மீட்பரே, உம்மண்டை சேர்த்துக் கொள்ளுமே.   5. வியாதியஸ்தர், வறியோர், ஆதரவற்ற சிறியோர், புலம்புவோர் எல்லாரையும் அன்பாய் விசாரித்தருளும்.   6. பேரன்பின் சாகரத்திலும் நான் மூழ்கி வாழுமளவும், என் ஆயுள்காலம் முழுதும் உம் அருள் தந்து காத்திடும்.

மூலைக் கல் கிறிஸ்துவே - Moolai kal kristuve Lyrics

மூலைக் கல் கிறிஸ்துவே 1. மூலைக் கல் கிறிஸ்துவே அவர்மேல் கட்டுவோம் அவர் மெய் பக்தரே விண்ணில் வசிப்போராம் அவரின் அன்பை நம்புவோம், தயை பேரின்பம் பெறுவோம்   2. எம் ஸ்தோத்ரப் பாடலால் ஆலயம் முழங்கும் ஏறிடும் எம் நாவால் திரியேகர் துதியும் மா நாமம் மிக்கப் போற்றுவோம், ஆனந்தம் ஆர்க்கப் பாடுவோம்   3. கிருபாகரா, இங்கே தங்கியே கேட்டிடும் மா ஊக்க ஜெபமே பக்தியாம் வேண்டலும் வணங்கும் அனைவோருமே பெற்றிட ஆசி மாரியே

மான்கள் நீரோடை வாஞ்சித்து - Maangal Neerodai Vaanjithu Lyrics

மான்கள் நீரோடை வாஞ்சித்து மான்கள் நீரோடை வாஞ்சித்து கதறும் போல் தேவனே எந்தன் ஆத்துமா உம்மையே  வாஞ்சித்து கதறுதே தஞ்சமே நீர் அடைக்கலம் நீர் கோட்டையும் நீர் என்றும் காப்பீர்   1. தேவன் மேல் ஆத்துமாவே தாகமாயிருக்கிறதே தேவனின் சந்நிதியில் நின்றிட ஆத்துமா வாஞ்சிக்குதே   2.ஆத்துமா கலங்குவதேன் நேசரை நினைத்திடுவாய் அன்பரின் இரட்சிப்பினால் தினமும் துதித்து போற்றிடுவோம் Video:

மாசில்லாத் தேவ புத்திரன் - Maasilla Deva Puthran Lyrics

மாசில்லாத் தேவ புத்திரன் மாசில்லாத் தேவ புத்திரன் மானிடனானார், ஜெய! ஜெய! (2) மாசில்லாத் தேவ புத்திரன் மானிடனானாரே, ஜெய! ஜெய! மாசில்லாத் தேவ புத்திரன் மானிடனானார், ஜெய! ஜெய!   1. ஆசீர்வாதமே! - - - - கன தேசார் நீதமே ஆசீர்வாதமே! - - - - கன தேசார் நீதமே - - ஒளிர் குhசினி மீததி நேசப் பி…ரகாச விண் வாச கிருபாசன - மாசில்லாத்   2. சத்திய வாசகர் - - - - சதா - - நித்திய தேசிகர் சத்திய வாசகர் - - - - சதா - - நித்திய தேசிகர் - - வளர் பெத்லகேம் ஊர்தனிலே கரி சித்துக் கன்னி…யாஸ்திரி வித்தினில் - மாசில்லாத்   3. அந்தரம் பூமியும் - - - - அதி - - சுந்தர நேமியும் அந்தரம் பூமியும் - - - - அதி - - சுந்தர நேமியும் - - தினம் ஐந்தொரு நாளினிலே தரு முந்தின மூ...ன்றிலொன்றாகிய - மாசில்லா

மா மாட்சி கர்த்தர் சாஷ்டாங்கம் செய்வோம் - Maa maatchi karthar saashtaangam seivom Lyrics

மா மாட்சி கர்த்தர் சாஷ்டாங்கம் செய்வோம் 1. மா மாட்சி கர்த்தர் சாஷ்டாங்கம் செய்வோம் வல்லவர் அன்பர் பாடிப் போற்றுவோம் நம் கேடகம் காவல் அனாதியானோர் மகிமையில் வீற்றுத் துதி அணிந்தோர்   2. சர்வ வல்லமை தயை போற்றுவோம் ஒளி தரித்தோர் வானம் சூழ்ந்தோராம் குமுறும் மின்மேகம் கோபரதமே கொடும் கொண்டல் காற்றிருள் சூழ்பாதையே   3. மா நீச மண்ணோர் நாணல் போன்றோர் நாம் என்றும் கைவிடீர் உம்மை நம்புவோம் ஆ, உருக்க தயை! முற்றும் நிற்குமே மீட்பர் நண்பர் காவலர் சிருஷ்டிகரே   4. ஆ, சர்வ சக்தி! சொல்லொன்னா அன்பே! மகிழ்வாய் விண்ணில் தூதர் போற்றவே போற்றிடுவோம் தாழ்ந்தோர் நாம் அற்பர் என்றும் மெய் வணக்கமாய் துதி பாடலோடும்

மா தூய ஆவி! இறங்கும் - Maa thooya aavi irangum Lyrics

மா தூய ஆவி ! இறங்கும் மா தூய ஆவி! இறங்கும் விண் தீபம் நெஞ்சில் ஏற்றிடும் ஞானாபிஷேக தைலம் நீர் நல் வரம் ஏழும் ஈகிறீர். ஆமேன்.

மரித்தோர் எவரும் உயிர்த்தெழுவார் - Marithor evarum uyirthezhuvaar Lyrics

மரித்தோர் எவரும் உயிர்த்தெழுவார் பல்லவி மரித்தோர் எவரும் உயிர்த்தெழுவார், வானெக்காளத் தொனி முழங்க. அனுபல்லவி எரி புகை மேக ரத மேறி ஏசு மகா ராஜன் வருங்கால். சரணங்கள்   1. தூதர் மின் னாற்றிசை துலங்க, ஜோதி வான் பறை இடி முழங்க, பாதகர் நெஞ்சம் நடுநடுங்க, பரிசுத் தோர் திரள் மனதிலங்க.   2. வானம் புவியும் வையகமும் மட மட வென்று நிலை பெயர, ஆன பொருளெல்லாம் அகன் றோட, அவரவர் தம் தம் வரிசையிலே.   3. அழிவுள் ளோராய் விதைக்கப்பட்டோர் அழியா மேனியை அணிந்திடுவார்; எளிய ரூபமாய் விதைக்கப்பட்டோர் என்றும் வாழும் ஜோதிகளாய். Video:

மந்தையில் சேரா ஆடுகளே - Manthaiyil sera aadugale Lyrics

மந்தையில் சேரா ஆடுகளே   மந்தையில் சேரா ஆடுகளே   எங்கிலும் கோடி கோடி உண்டே  சிந்தையில் ஆன்ம பாரம் கொண்டே  தேடுவோம் வாரீர் திருச்சபையே - மந்தையில்  அழைக்கிறார் இயேசு  அவரிடம் பேசு நடத்திடுவார்    1. காடுகளில் பல நாடுகளில்  என் ஜனம் சிதறுண்டு சாகுவதா?  பாடுபட்டேன் அதற்காகவுமே  தேடுவோர் யார் என் ஆடுகளை?    2. சொல்லப்பட்டிராத இடங்கள் உண்டு  என்னை அங்கு சொல்ல இங்கு ஆட்கள் உண்டு  அழைப்புப் பெற்றோர் யாரும் புறப்படுவீர்  இது ஆண்டவர் கட்டளை கீழ்ப்படிவீர்    3. எனக்காய்ப் பேசிட நாவு வேண்டும்  என்னைப்போல் அலைந்திட கால்கள் வேண்டும்  என்னில் அன்புகூர ஆட்கள் வேண்டும்  அதை உன்னிடம் கேட்கிறேன் - தரவேண்டும் 

மேக மீதில் இயேசு ராஜன் வேகம் வாறாரே - Mega meethil yesu raajan Lyrics

மேக மீதில் இயேசு ராஜன் வேகம் வாறாரே பல்லவி     மேக மீதில் இயேசு ராஜன் வேகம் வாறாரே!         அனுபல்லவி     ஆயத்தமுள்ளவரை ஆகாயம் சேர்க்க அவரே வாராறே!     சரணங்கள்1 1 . ஆண்டவர்தாமே ஆர்ப்பரிப்போடே அவனியில் வாறாரே!      மீண்டவரோ மேலோகமே செல்ல மேதினியை விடுவார் - மேகமீதில் 2 . கிறிஸ்துவுக்குள்ளே மரித்தோரெல்லாம் கிளம்பியே எழும்பிடுவார்     மரிக்காதிருக்கும் பரிசுத்தரெல்லாம் மறைந்தே போவாரே - மேகமீதில் 3 . பாடுபட்டோர்க்குப் பலனளிப்பாரே பாடு பட்டவர் தாமே     கூடும் நமக்கோ குறைவில்லா பலனை கூவியே  கொடுத்திடுவார் - மேகமீதில் 4 . அவருரைத்த அடையாளங்களெல்லாம் தவறாமல் நடக்கின்றதே!     அவர் வரும் வேளையை எவருமே அறியார் ஆண்டவரே அறிவார் -   மேகமீதில் 5 . ஆயிர வருஷ ஆளுகை செய்வார் ஆண்டவர் இயேசுதாமே!     நீதி சமாதானம் நிறைந்தே இருக்கும் ஜோதியின் ஆளுகையில் -   மேகமீதில் 6 . அல்லேலூயா கீதம் பாடி அகமகிழ்ந்திடுவோமே     வல்லவர...

மண்ணோரை மீட்டிடவே பாரில் - Mannorai meettidave paaril Lyrics

மண்ணோரை மீட்டிடவே பாரில் மண்ணோரை மீட்டிடவே பாரில் விண் வேந்தன் மைந்தனாகினார் (2)   1. தீர்க்கர் உறைத்த வாக்கின்படியே மார்க்கம் திறக்க மனிதனானார் வாக்கு மாறா தேவ மைந்தன் ஏழைக் கன்னி மடியில் உதித்தார் மாபுகழ் பாடுவோமே துதி சாற்றுவோமே தூதரோடு நாமும் பாடுவோம்   2. மண்ணில் கொடிய இருள் நீங்க மன்னன் ஜீவ ஒளியாய் தோன்றினார் விண்ணில் மா ஒளிவிளங்க மன்னர் மூவர் தேடி வந்தார் மாபுகழ் பாடுவோமே துதி சாற்றுவோமே தூதரோடு நாமும் பாடுவோம்

மாதா உன் கோவிலில் - Matha un kovilil Lyrics

மாதா உன் கோவிலில் மாதா உன் கோவிலில் மணி தீபம் ஏற்றினேன் மாதா உன் கோவிலில் மணி தீபம் ஏற்றினேன் தாயென்று உன்னைதான் தாயென்று உன்னைதான் பிள்ளைக்கு காட்டினேன் - மாதா சரணம் 1 மேய்ப்பன் இல்லாத மந்தை வழி மாறுமே - 2 மேரி உன் ஜோதி கண்டால் விதி மாறுமே மெழுகு போல் உருகினோம் கண்ணீரை மாற்ற வா - மாதா மாதா உன் கோவிலில் மணி தீபம் ஏற்றினேன் சரணம் 2 காவல் இல்லாத ஜீவன் கண்ணீரிலே - 2 தரை கண்டிடாத ஓடம் தண்ணீரிலே அருள்தரும் திருச்சபை மணியோசை கேட்குமோ - மாதா மாதா உன் கோவிலில் மணி தீபம் ஏற்றினேன் சரணம் 3 பிள்ளை பெறாத பெண்மை தாயானது - 2 அன்னை இல்லாத மகனை தாலாட்டுது கர்த்தரின் கட்டளை... நான் என்ன சொல்வது - மாதா மாதா உன் கோவிலில் மணி தீபம் ஏற்றினேன் மாதா உன் கோவிலில் மணி தீபம் ஏற்றினேன் தாயென்று உன்னை தான் தாயென்று உன்னை தான் பிள்ளைக்கு காட்டினேன் - மாதா Audio:  மாதா உன் கோவிலில் மணி தீபம் ஏற்றினேன் Video:  

மாசில்லா கன்னியே மாதாவே உன்மேல்

மாசில்லா கன்னியே மாதாவே உன்மேல்   மாசில்லா   கன்னியே மாதாவே உன்மேல்   நேசமில்லாதவர் நீசரே   ஆவார் | வாழ்க! வாழ்க! வாழ்க மரியே! | ...(2)   - (2)     மூதாதை தாயார் செய் முற்பாவமற்றாய் அதியில்லாதோனை மாதே நீ பெற்றாய் | வாழ்க! வாழ்க! வாழ்க மரியே! | ...(2)    - (2) தாயே   நீ ஆனதால்   தாபரிதென்மேல் நேசம்   வைத்தாள்வது நின்   கடனாமே | வாழ்க! வாழ்க! வாழ்க மரியே! | ...(2)    - (2)     அருள் நிறைந்த மாதாவே ஆண்டவர் உம்முடனே பெண்களுக்குள்ளே பேறு பெற்றாயே | வாழ்க! வாழ்க! வாழ்க மரியே! |...(2)   -  (2) **வாழ்க! வாழ்க! வாழ்க மரியே! என்பதை ஆமென்! ஆமென்! ஆமென் மரியே! என்றும் பாடலாம்.** Video:

மணவாழ்வு புவி வாழ்வினில் வாழ்வு - Manavaazhvu Puvi thanil Vaazhvu Lyrics

மணவாழ்வு புவி வாழ்வினில் வாழ்வு பல்லவி மணவாழ்வு புவி வாழ்வினில் வாழ்வு - மங்கள வாழ்வு  வாழ்வினில் வாழ்வு மணவாழ்வு புவி வாழ்வினில் வாழ்வு மருவிய சோபன சுப வாழ்வு சரணங்கள்   1. துணை பிரியாது, தோகையிம்மாது துப மண மகளிவர் இதுபோது மனமுறை யோது வசனம் விடாது வந்தன ருமதருள் பெறவேது – நல்ல   2. ஜீவ தயாகரா, சிருஷ்டியதிகாரா தெய்வீக மாமண வலங்காரா தேவகுமாரா, திருவெல்லையூரா சேர்ந்தவர்க்கருள் தரா திருப்பீரா? – நல்ல   3. குடித்தன வீரம் குணமுள்ள தாரம் கொடுத்துக் கொண்டாலது சமுசாரம் அடக்கமாசாரம் அன்பு, உதாரம் அம்புவிதனில் மனைக்கலங்காரம் – நல்ல  Video: