Skip to main content

Posts

Showing posts with the label என் தேடல் நீயே

உம் பணி வாழ்வையே எங்கள் அகலாக ஏற்று - Um pani vaazhvaiye engal agalaaga yetru lyrics

 உம் பணி வாழ்வையே எங்கள் அகலாக ஏற்று  உம் பணி வாழ்வையே எங்கள் அகலாக ஏற்று  அயராது உழைப்போம் தளராது ஜெபிப்போம்  அன்பென்னும் கொடையால் மனித வாழ்வை  அழியா உறவில் இணைக்கும் பணியை  நிறைவாய் வாழ்ந்த இறைமைந்தனே  எங்கள் அருள்வாழ்வின் வழிகாட்டியே சிறைப்பட்டோர் விடுதலை அடைய வந்தீர்  வறியவர் வாழ்வுக்கு வழிவகுத்தீர் - 2  உலகின் இடர்களை வென்றிடவே - இறை  சித்தத்தில் நாளும் வாழ்ந்தவரே  நற்செய்தி முழங்கி நம்பிக்கை வாழ்வில்  புதிதாய் உலகை மாற்றினீரே தந்தையின் அன்பினைப் பகிர்ந்தவரே - இறை  ஆவியின் ஏவுதல் நிறைந்தவரே - 2  ஆயிரம் ஆயிரம் புதுமைகளால் - அன்று  எளியவர் மனதை ஆட்கொண்டீர்  வாழ்வெனும் கடலில் அன்பெனும் படகாய்  என்னிலே வாழ்ந்திடும் பரம்பொருளே Video:

இறைமக்கள் அக மகிழ்ந்து வருகின்ற திருப்பவனி - Iraimakkal aga magizhnthu song lyrics

இறைமக்கள் அக மகிழ்ந்து வருகின்ற திருப்பவனி  இறைமக்கள் அக மகிழ்ந்து வருகின்ற திருப்பவனி (2) திருச்சபை இணைந்து கிறிஸ்துவோடு தருமே தியாகப்பலி  வாராய் இறைத்திரு குலமே வாழ்வாய் பேருடனே (2) -இறைமக்கள் அக மகிழ்ந்து  மலருடன் சேரும் யாவுமே  மணம் பெற்று வாழ்தல் நீதியே (2) புவி வாழ்வை நாமும் தரவே  இறை மாண்பை இன்றே பெறவே  நிறைவாய் வரும்வோம்  தேவன் அருள் பெறுவோம்  இறைவன் நிழலில் வாழ்வின் பொருள் பெறுவோம்  வாராய் இறைத்திரு குலமே வாழ்வாய் பேருடனே (2) -இறைமக்கள் அக மகிழ்ந்து   மகிழ்வுடன் பாடும் வேலையே  மனங்களின் சோர்வை நீக்குமே (2) திருவாழ்வை தேடி பெறுவோம்  மறைவாழ்வின் நன்மை அடைவோம்  பணிவாய் குலமாய் இயேசு பதம் இணைவோம்  மறையின் வழியில் வேத ஒளி பெறுவோம். வாராய் இறைத்திரு குலமே வாழ்வாய் பேருடனே (2) -இறைமக்கள் அக மகிழ்ந்து Video:

என் தேடல் நீ என் தெய்வமே - En thedal ne en deivame Lyrics

என் தேடல் நீ என் தெய்வமே என் தேடல் நீ என் தெய்வமே நீயின்றி என் வாழ்வு நிறம் மாறுதே உன்னை மனம் தேடுதே நீ வழி காட்டுமே இறைவா இறைவா வ‌ருவாய் இங்கே இத‌ய‌ம் அருகில் அம‌ர்வாய் இன்றே   ஒரு கோடி விண்மீன்க‌ள் தின‌ம் தோன்றினும் நீயின்றி என் வாழ்வு இருள் சூழ்ந்திடும் பிற‌ர் அன்பை என் ப‌ணியில் நான் ஏற்கையில் உன் அன்பு உயிர் த‌ந்து வாழ்வாகிடும் இறைவார்த்தையில் நிறை‌வாகுவேன் ம‌றைவாழ்விலே நிலையாகுவேன் வ‌ழிதேடும் எனைக் காக்க‌ நீ வேண்டுமே   உன்னோடு நான் காணும் உற‌வான‌து உள்ள‌த்தை உருமாற்றி உன‌தாக்கிடும் ப‌லியான் உனை நானும் தின‌ம் ஏற்கையில் எளியேனில் உன் வாழ்வு ஒளியாகிடும் உன் மீட்ட‌லால் எனில் மாற்ற‌ங்க‌ள் உன் தேட‌லால் எனில் ஆற்ற‌ல்க‌ள் வ‌ழிதேடும் எனைகாக்க‌ நீ வேண்டுமே Video: