Skip to main content

Posts

Showing posts with the label ரோ)

ராஜ ராஜா தேவராஜன் இயேசு மகாராஜன் - Raja Raajan Devarajan Yesu Lyrics

ராஜ ராஜா தேவராஜன் இயேசு மகாராஜன் பல்லவி  ராஜ ராஜா தேவராஜன் இயேசு மகாராஜன் மகாராஜன் தான்...மகாராஜன் தான்... ஏழ்மை கோலம் எடுத்துதித்து  பாவத்தை போக்க வந்தவர்  பாலகனாய் பிறந்த நாள்... சரணம்  மண்ணில் நிந்தைகள் மடிந்து ஒழிய விண்ணின் விந்தைகள் புவி அறிய அன்பில் தேசம் என்றும் செழிக்க  இயேசு பாலகனாய் பிறந்தார்(2) -ராஜ ராஜா தேவராஜன் ஏழ்மை கோலம் எடுத்துதித்து  பாவத்தை போக்க வந்தவர்  பாலகனாய் பிறந்த நாள்... விழி தந்தையை கண்டு ஒளிர மொழி பரமனின் புகழை பாட வழி வேதத்தில் நிலைத்து திகழ  இயேசு பாலகனாய் பிறந்தார் (2) -ராஜ ராஜா தேவராஜன் ஏழ்மை கோலம் எடுத்துதித்து  பாவத்தை போக்க வந்தவர்  பாலகனாய் பிறந்த நாள்... துன்பம் துயரங்கள் அழிந்து நீங்க இன்பம் நிறைவாய் எழுந்து ஒங்க மன்னன் மறை மொழி ஏற்று வாழ இயேசு பாலகனாய் பிறந்தார் (2) -ராஜ ராஜா தேவராஜன் ஏழ்மை கோலம் எடுத்துதித்து  பாவத்தை போக்க வ...

ராஜாதி ராஜனாம் ஏசுவே-Rajathi Rajanam Yesuve Lyrics-Jollee Abraham

ராஜாதி ராஜனாம் ஏசுவே ராஜாதி ராஜனாம் ஏசுவே...  பாரில்  உம் ராஜ்ஜியம் வர வேண்டுமே...(3) பல்லவி  ராஜாதி ராஜனாம் ஏசுவே  உம் ராஜ்ஜியம் இப்பாரில் வர  வேண்டுமே உம்மையும் மானிடர் அறிந்திடவே  நான் உம் புகழ் பாடிடுவேன்... - ராஜாதி ராஜனாம் சரணம்  ஐந்து அப்பத்தை ஐந்தாயிரம் பேருக்கு  உணவு நல்கிய இயேசு நாதா..(2) மாண்டு அழுகிய விதவை மகனுக்கு  உயிர் கொடுத்த என் தேவா...(2) உயிர் கொடுத்த என் தேவா... - ராஜாதி ராஜனாம் மாயை உலகத்தின் இச்சைகள் ஆடி... பாவத்தில் விழுந்தோம் இந்நாள் வரை...(2) நீங்காத உமதருள் என்னில் ஈந்து  மங்காத வாழ்வை தந்திடுவீர்...(2) மங்காத வாழ்வை தந்திடுவீர்... - ராஜாதி ராஜனாம் Video:

ரோஜாப்பூ வாசமலர்கள் நாம் - Rojapoo vasamalargal naam Lyrics

ரோஜாப்பூ வாசமலர்கள் நாம் ரோஜாப்பூ வாசமலர்கள் நாம் இப்போ நேச மணாளர் மேல்  தூவிடுவோம் (2)  மல்லிகை முல்லை சிவந்தி பிச்சி  மெல்லியர் சேர்ந்து அள்ளியே வீசி  நல்மணமக்கள் மீது நாம்... எல்லா மலரும் தூவிடுவோம். ரோஜாப்பூ வாசமலர்கள் நாம் இப்போ நேச மணாளர் மேல்  தூவிடுவோம் (2)  மன்னனாம் மாப்பிள்ளை பண்புள்ள பெண்ணுடன்  அன்றிலும் தேனும் போல் ஒன்றித்து வாழ ஆண்டவர் ஆசீர்வதிக்க... நம் வேண்டுதலோடு தூவிடுவோம். ரோஜாப்பூ வாசமலர்கள் நாம் இப்போ நேச மணாளர் மேல்  தூவிடுவோம் (2)  புத்திர பாக்கியம் புகழும் நல் வாழ்வும்  சத்தியம் சாந்தம் சுத்த நல் இதயம்  நித்திய ஜீவனும் பெற்றிவரென்றும்... பக்தியை வாழ்ந்திட தூவிடுவோம்.  ரோஜாப்பூ வாசமலர்கள் நாம் இப்போ நேச மணாளர் மேல்  தூவிடுவோம் (2)  கறை திரை அற்ற மணவாட்டி சபையை  இறைவனாம் இயேசு கண்ணுடன் சேர்க்கும்  மங்கள நாளை எண்ணி இப்போ... நேச மணாளர் மேல் தூவிடுவோம். ரோஜாப்பூ...

ராஜா உம் பிரசன்னம் போதுமையா -Raja um prasannam pothumaiya Lyrics

ராஜா உம் பிரசன்னம் போதுமையா   ராஜா உம் பிரசன்னம் போதுமையா   எப்போதும் எனக்குப் போதுமையா  பிரசன்னம் பிரசன்னம்  தேவ பிரசன்னம்  1 உலகமெல்லாம் மாயையையா  உம் அன்பொன்றே போதுமையா  2. சீர்படுத்தும் சிருஷ்டிகரே  ஸ்திரப்படுத்தும் துணையாளரே  3. பெலப்படுத்தும் போதகரே  நிலைநிறுத்தும் நாயகரே 

ராஜன் பாலன் பிறந்தனரே - Raajan balan piranthanare Lyrics

ராஜன் பாலன் பிறந்தனரே ராஜன் பாலன் பிறந்தனரே தாழ்மையான தரணியிலே ஆதிபன் பிறந்தார் அமலாதிபன் பிறந்தனரே ஏழ்மையானதொரு மாட்டுக் கொட்டில்தனில் தாழ்மையாய் அவதரித்தார் … ராஜன்   1. அன்னை மரியின் கர்ப்பத்திலுதித்தார் அன்பன் ஏழையாய் வந்தார் அவர் மண்ணினில் மானிடரை காக்க வென்றே அவதரித்தார் … ராஜன்   2. பாரில் பாவம் போக்கவே பாங்குடன் மானிட ஜென்மம் எடுத்தார் அவர் பாதம் பணிந்திடுவோம் பாலனின் அன்புக்கோர் எல்லையுமுண்டோ மானிட ஜென்மம் எடுத்தார் … ராஜன

ராஜன் தாவீதின் ஊரினிலே - Raajan thaaveethin oorinile Lyrics

ராஜன் தாவீதின் ஊரினிலே ராஜன் தாவீதின் ஊரினிலே ராக்காலம் பெத்லேம் மேய்ப்பர்கள் மந்தையைக் காக்க விண்தூதர்கள் இறங்க விண் ஜோதி கண்டவரே   1. திகையாதே கலங்தாதே மகிழ்விக்கும் செய்தியுண்டு ராஜாதி ராஜன் வல்லமைத் தேவன் மானிடனாய் உதித்தார்   2. ஒரு மாட்டுத் தொழுவத்தினில் அன்னை மரியின் மடியினில் புல்லணை மீதினிலே கடுங்குளிர் நேரத்தில் பாலகனாய் பிறந்தார்   3. நட்சத்திரத்தின் ஒளியிலே மூன்று ஞானியர் வந்தனரே பொன் வெள்ளைத் தூபம் காணிக்கையேந்தி பாதம் பணிந்தனரே

ராஜன் தாவீதூரிலுள்ள -Raajan thaavithoorilulla Lyrics ( Once in royal David’s city tamil version)

ராஜன் தாவீதூரிலுள்ள ( Once in royal David’s city)  ராஜன்   தாவீதூரிலுள்ள மாட்டுக்கொட்டிலொன்றிலே கன்னி   மாதா   பாலன்   தன்னை முன்னணையில்   வைத்தாரே மாதா   மரியம்மாள்   தான் பாலன்   இயேசு   கிறிஸ்துதான்  வானம்   விட்டுப்   பூமி   வந்தார் மா   கர்த்தாதி   கர்த்தாவே அவர்   வீடோ   மாட்டுக்கொட்டில் தொட்டிலோ   முன்னணையே ஏழையோடு   ஏழையாய் வாழ்ந்தார்   பூவில்   தாழ்மையாய்  மாட்டுத்தொழுவத்திலல்ல தெய்வ   ஆசனத்திலும் ஏழைக்கோலமாக   அல்ல ராக   கிரீடம்   சூடியும் மீட்பர்   வீற்றிருக்கிறார் பாலர்   சூழ்ந்து   போற்றுவார் Sheet Music:

ராக்காலம் பெத்லேம் மேய்ப்பர்கள் -Raakkaalam Bethlehem meippargal Lyrics (While shepherds watched their flocks tamil version)

ராக்காலம் பெத்லேம் மேய்ப்பர்கள் ( While shepherds watched their flocks)   ராக்காலம்   பெத்லேம்   மேய்ப்பர்கள் தம்   மந்தை   காத்தனர் கர்த்தாவின்   தூதன்   இறங்க விண்   ஜோதி   கண்டனர்   அவர்கள்   அச்சம்   கொள்ளவும் விண்   தூதன்   திகில்   ஏன் எல்லருக்கும்   சந்தோஷமாம் நற்செய்தி   கூறுவேன்   தாவீதின்   வம்சம்   ஊரிலும் மெய்   கிறிஸ்து   நாதனார் பூலோகர்த்தார்க்கு   ரட்சகர் இன்றைக்கு   பிறந்தார்   இதுங்கள்   அடையாளமாம் முன்னணை   மீது   நீர் கந்தை   பொதிந்த   கோலமாய் அப்பாலனைக்   காண்பீர்   என்றுரைத்தான்   அக்ஷணமே விண்ணோராம்   கூட்டத்தார் அத்தூதனோடு   தோன்றியே கர்த்தாவைப்   போற்றினார்   மா   உன்னதத்தில்   ஆண்டவா நீர்   மேன்மை   பெறுவீர் பூமியில்   சமாதானமும் நல்லோர்க்கு   ஈகுவீர்  Sheet Music: ...