Skip to main content

சுருக்கமான காலை வழிபாடு; விரிவான மாலை வழிபாடு-பரிசுத்த ஆவியை நோக்கி

சுருக்கமான காலை வழிபாடு
என் இறைவா,
உம்மை நான் வணங்கித் தொழுகிறேன்.
என் முழு மனதோடு உம்மை அன்பு செய்கிறேன்.
என்னைப் படைத்துக் கிறிஸ்துவனாக்கிக் கடந்த
இரவில் காப்பாற்றியதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன்.
இந்நாளின் செயல்களையெல்லாம் உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன்.
உமது திருவுளத்திற்கு ஏற்றவாறு அடியேன் நடக்க அருள் புரிவீராக.
உம் மேன்மைக்காக என்னைப் பாவத்திலிருந்தும் ஒவ்வொரு
தீமையிலிருந்தும் காப்பீராக. என்னிடமும் என் அன்புக்குரிய
அனைவரிடமும் உம் திருவருள் இருப்பதாக. ஆமென்.

விரிவான மாலை வழிபாடு-பரிசுத்த ஆவியை நோக்கி

தூய ஆவியே, எழுந்தருள்வீர்,
வானின்றுமது பேரொளியின்
அருட்சுடர் எம்மீ தனுப்பிடுவீர்.
எளியவர் தந்தாய், வந்தருள்வீர்,
நன்கொடை வள்ளலே, வந்தருள்வீர்,
இருதய ஒளியே வந்தருள்வீர்.
 
உன்னத ஆறுத லானவரே,
ஆன்ம இனிய விருந்தினரே,
இனிய தன்மையும் தருபவரே,
 
உழைப்பில் களைப்பைத் தீர்ப்பவரே,
வெம்மை தணிக்கும் குளிர்நிழலே,
அழுகையில் ஆறுத லானவரே,
 
உன்னத பேரின்ப ஒளியே,
உம்மை விசுவசிப் போருடைய
நெஞ்சின் ஆழம் நிரப்பிடுவீர்.
 
உமதருள் ஆற்றல் இல்லாமல்
உள்ளது மனிதனில் ஒன்றுமில்லை,
நல்லது அவனில் ஏதுமில்லை.
 
மாசு கொண்டதைக் கழுவிடுவீர்.
வரட்சி யுற்றதை நனைத்திடுவீர்.
காயப் பட்டதை ஆற்றிடுவீர்.
 
வணங்கா திருப்பதை வளைத்திடுவீர்,
குளிரானதைக் குளிர் போக்கிடுவீர்,
தவறிப் போனதை ஆண்டருள்வீர்.
 
இறைவா, உம்மை விசுவசித்து,
உம்மை நம்பும் அடியார்க்குக்
கொடைகள் ஏழும் ஈந்திடுவீர்.
 
புண்ணிய பலன்களை வழங்கிடுவீர்.
இறுதியில் மீட்பும் ஈந்திடுவீர்.
அழிவிலா இன்பம் அருள்வீரே.
 
ஆமென்.

Comments

Popular posts from this blog

நோயுற்றோர் நலம்பெற செபம் -நோய் வேளை மன்றாட்டு

நோயுற்றோர் நலம்பெற செபம்  இடைவிடா சகாய அன்னையே! பனிமாதாவே இரக்கமுள்ள தாயே, நோயுற்றோரின் பிணிகளை உம் திருமகன் சுமந்துகொண்டார்; தன்னை விசுவாசத்தோடு நாடி வந்தோர்க்கு நலமளித்தார். இதோ நோயுற்றிருக்கும் எங்களை (பெயர்களை சொல்லவும்) கண்நோக்கியருள்ளும். எங்களுடைய பாவங்களையும் பலவீனத்தையும் பாராமல், திருசபையோரின் விசுவாசத்தையும் கண்ணுற்று எங்களுக்கு நலமளிக்க இறைவனை மன்றாடும். நாங்கள் பிணிகளை ஏற்ப்பது இறைவனின் திருவுளமானால் புருமையுடனும், மனமகிழ்வுடனும் ஏற்றுக்கொள்ள மனவுறுதியை பெர்றுதாரும். நோயில் நாங்கள் துவளும் போதும் உம்மைப்போலவே 'இதோ உமது அடிமை, உமது வார்த்தையின்படியே எனக்கு ஆகட்டும்' என்று இன்முகத்தோடு கூறி ஏற்றுக்கொள்ள இறைவனிடமிருந்து வரங்களை பெற்றுத் தந்தருளும். - ஆமென். நோய் வேளை மன்றாட்டு இரக்கமுள்ள குழந்தை இயேசுவே ! நோயாளிகளுக்கு நீர் காட்டிய கருணை எனக்குத் தெரியும் . இவ்வுலகிலே நீர் வாழ்ந்த போது, நோயாளிகளையும், அங்கம் குறைந்தவர்களையும் தீராத நோயால் துன்புற்றோரையும், உமது கனிவான கரத்தால் தொட்டு குணமாக்கினீர் .   இன்று...

சுருக்கமான மனத்துயர் செபம்:

சுருக்கமான மனத்துயர் செபம்: என் இறைவனாகிய தந்தையே! நீர் நன்மை நிறைந்தவர், எனவே எல்லாவற்றிற்கும் மேலாக உம்மை நான் அன்பு செய்கிறேன். என் பாவங்களால் உமது அன்பை மறந்ததற்காக மனம் வருந்துகிறேன். உமது அருளுதவியால் இனிமேல் பாவம் செய்வதில்லையென்று உறுதி கூறுகிறன். ஆமென்.

காணிக்கை ஜெபம்:

காணிக்கை ஜெபம்: இயேசுவின் திரு இருதயமே! நாங்கள் கட்டிக்கொள்ளும் துரோகங்களுக்குப் பரிகாரமாகவும் தேவரீர் திருப்பீடத்தில் ஓயாமல் உம்மைத்தானே பலியாக ஒப்புக்கொடுக்கும் சகல கருத்துக்களுக்காகவும், அடியேல் இன்று செய்யும் ஜெபங்களையும், கிரியைகளையும், படுந்துன்ப வருத்தங்களையும், தூய கன்னிமரியாயின் மாசில்லாத திரு இருதயத்தின் வழியாக உமக்கு ஒப்புக்கோடுக்கிறேன் சுவாமி. இந்த மாதத்திற்கும் இந்த நாளுக்கும் சபையாருக்கும் குறிக்கப்பட்ட சகல கருத்துக்களுக்காகவும் விசேஷமாய் அவைகளை ஒப்புக்கொடுக்கிறேன் சுவாமி -ஆமென். அத்தியந்த மகிமையுள்ள பரலோக இராசேஸ்வரியான பரிசுத்த தேவமாதாவே உம்முடைய திருபாதத்தை நாங்கள் நமஸ்கரித்து இந்தச் செபமாலைத் தியானத்தை உமக்குப் பாத காணிக்கையாக வைத்து ஒப்புக்கொடுக்கின்றோம். இதை நீரே கையேற்று உம்முடைய திருக்குமாரனிடத்திலே கையளித்து இதிலே நாங்கள் தியானித்த மறை நிகழ்ச்சிகளுடைய பலனை அடையவும் சுகிரேத போதனையின் படியே நடந்து இவ்வுலகத்திற் சகல விக்கினங்களும் நிவாரணமாகவும் பரலோகத்திலே உம்மோடே உம்முடைய திருக்குமாரனுடைய மோட்சமுக தரிசனையைக் க...