Skip to main content

தொழிளாளர்களின் செபம்

தொழிளாளர்களின் செபம்


அனுதின வேலைகளை ஒப்புக் கொடுக்கும் செபம்:


தெய்வீகத் தொழிலாளியாகிய இயேசுவே,
அடியேன் இன்று செய்யும் ஜெபங்களையும்,
தொழில்களையும், எனக்கு ஏற்படும் களைப்பு,
ஆயாசம், துன்ப வருத்தங்கள் அனைத்தையும்,
தொழிலாளிகளின் மனந்திரும்புதலுக்காகவும்,
அர்ச்சிப்புக்காகவும் தேவரீருக்கு ஒப்புக்கொடுக்கிறேன். -ஆமென்.

இயேசுவின் திரு இருதயமே, உமது அரசு வருக !
நாசரேத்து அன்னையே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
தொழிலாளரின் மாதிரியாகிய புனித சூசையப்பரே,
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

தொழிலாளிகளின் செபம்: 

அனைத்தையும் படைத்துப் பராமரிக்கும் இறைவா,
நெற்றி வியர்வை தரையில் விழ உழைக்க எமக்குப்
பணித்தீரே ! நான் என் வேலைகளை விரும்பவும்,
அன்பு செய்யவும் அருள்வீராக. நேரத்தோடு
வேலைக்குச் சென்று காலத்தையும் பொருளையும்,
பணத்தையும் வீணாக்காமல், நுணுக்கமான கவனத்துடன்
உழைப்பேனாக. எப்பொழுதும் வேலையில் உற்சாகத்தோடும்,
உடன் ஊழியருடன் மரியாதையோடும், நிறுவனத்தார்க்குப்
பிரமாணிக்கத்தோடும் நடந்து கொள்வேனாக. என் வேலையின்
பயனால் என் வீடும், எமது தொழிலும்,
பொது மக்களும் பயனடையச் செய்தருளும்.
 
தொழிலாளியின் பாதுகாவலரான புனித சூசையப்பரே !
உமது தொழிலை இறைமகனே வாழ்த்தி, உமக்கு உதவியாக
வந்து தச்சுத் தொழிலைச் செய்தாரே! உமது தொழிலை
நீர் அன்பு செய்து திருக்குடும்பத்தைக்
காப்பாற்றியதுபோல், நானும் என் தொழிலைப் பெரிதெனக்
கருதி, அதனை அன்பு செய்து, என் குடும்பத்தையும்
காப்பாறுவேனாக. இறைவனின் திருவுளத்தை உமது தொழிலால்
நிறைவு செய்ததுபோல், என் தொழிலால் இறைவனின்
திருவுளத்தை நானும் நிறைவு செய்ய எனக்காக அதே
இயேசுவிடனம் மன்றாடுவீராக. -ஆமென்
 
-----------------
 
நல்ல இயேசுவே, என் இரட்சகரே! தேவரீர் ஒரு
தொழிலாளியாய் இருக்க திருவுளம் கொண்டமையால்,
என் ஆண்டவரும் மாதிரியுமாகிய உம்மை நான் அணுகி வருகிறேன்.
நாசரேத்தூரில் அந்த எளிய தொழிற்சாலையில், சாந்தமும்
தாழ்ச்சியும் உள்ளவராய், தூய்மை, வாய்மை, நேர்மை,
மேரை மரியாதை நிறைந்தவராய் வாழ்ந்தீர், உமது தொழில்
முயற்சிகளில் பரிகார உணர்ச்சி ததும்பி நின்றது.
கடின பிரயாசையான உம் வேலைகளை செபத்தினாலும்,
கீழ்படிதலினாலும் நீர் அர்ச்சித்தீர்.
 
ஓ இயேசுவே ! தெய்வீகத் தொழிலாளியே, நானும்
இப்படி இருக்க எனக்கு வரமருளும்.
உம்முடைய திருவருளின் உதவியினாலும், வேலையாட்கள்,
தொழில் பயிலுவோர்களின் பாதுகாவலர்களாகிய தேவ தாயார்,
சூசையப்பர் இவர்களுடைய ஆசீர்வாதத்தின் பலனாலும்
இன்னும் அதிகமதிகமாய் நானும் தேவரீரைப் போல் வாழ்ந்து,
உழைப்பேனாக. என் திவ்விய இரட்சகரே, கடும் பிரயாசைகள்
நிறைந்த இவ்வுலக வாழ்க்கையை நான் முடித்தபின், உமது நித்திய
இளைப்பாற்றியை எனக்குக்குக் கட்டளையிட்டருளும். -ஆமென்

Comments

Popular posts from this blog

நோயுற்றோர் நலம்பெற செபம் -நோய் வேளை மன்றாட்டு

நோயுற்றோர் நலம்பெற செபம்  இடைவிடா சகாய அன்னையே! பனிமாதாவே இரக்கமுள்ள தாயே, நோயுற்றோரின் பிணிகளை உம் திருமகன் சுமந்துகொண்டார்; தன்னை விசுவாசத்தோடு நாடி வந்தோர்க்கு நலமளித்தார். இதோ நோயுற்றிருக்கும் எங்களை (பெயர்களை சொல்லவும்) கண்நோக்கியருள்ளும். எங்களுடைய பாவங்களையும் பலவீனத்தையும் பாராமல், திருசபையோரின் விசுவாசத்தையும் கண்ணுற்று எங்களுக்கு நலமளிக்க இறைவனை மன்றாடும். நாங்கள் பிணிகளை ஏற்ப்பது இறைவனின் திருவுளமானால் புருமையுடனும், மனமகிழ்வுடனும் ஏற்றுக்கொள்ள மனவுறுதியை பெர்றுதாரும். நோயில் நாங்கள் துவளும் போதும் உம்மைப்போலவே 'இதோ உமது அடிமை, உமது வார்த்தையின்படியே எனக்கு ஆகட்டும்' என்று இன்முகத்தோடு கூறி ஏற்றுக்கொள்ள இறைவனிடமிருந்து வரங்களை பெற்றுத் தந்தருளும். - ஆமென். நோய் வேளை மன்றாட்டு இரக்கமுள்ள குழந்தை இயேசுவே ! நோயாளிகளுக்கு நீர் காட்டிய கருணை எனக்குத் தெரியும் . இவ்வுலகிலே நீர் வாழ்ந்த போது, நோயாளிகளையும், அங்கம் குறைந்தவர்களையும் தீராத நோயால் துன்புற்றோரையும், உமது கனிவான கரத்தால் தொட்டு குணமாக்கினீர் .   இன்று...

சுருக்கமான மனத்துயர் செபம்:

சுருக்கமான மனத்துயர் செபம்: என் இறைவனாகிய தந்தையே! நீர் நன்மை நிறைந்தவர், எனவே எல்லாவற்றிற்கும் மேலாக உம்மை நான் அன்பு செய்கிறேன். என் பாவங்களால் உமது அன்பை மறந்ததற்காக மனம் வருந்துகிறேன். உமது அருளுதவியால் இனிமேல் பாவம் செய்வதில்லையென்று உறுதி கூறுகிறன். ஆமென்.

காணிக்கை ஜெபம்:

காணிக்கை ஜெபம்: இயேசுவின் திரு இருதயமே! நாங்கள் கட்டிக்கொள்ளும் துரோகங்களுக்குப் பரிகாரமாகவும் தேவரீர் திருப்பீடத்தில் ஓயாமல் உம்மைத்தானே பலியாக ஒப்புக்கொடுக்கும் சகல கருத்துக்களுக்காகவும், அடியேல் இன்று செய்யும் ஜெபங்களையும், கிரியைகளையும், படுந்துன்ப வருத்தங்களையும், தூய கன்னிமரியாயின் மாசில்லாத திரு இருதயத்தின் வழியாக உமக்கு ஒப்புக்கோடுக்கிறேன் சுவாமி. இந்த மாதத்திற்கும் இந்த நாளுக்கும் சபையாருக்கும் குறிக்கப்பட்ட சகல கருத்துக்களுக்காகவும் விசேஷமாய் அவைகளை ஒப்புக்கொடுக்கிறேன் சுவாமி -ஆமென். அத்தியந்த மகிமையுள்ள பரலோக இராசேஸ்வரியான பரிசுத்த தேவமாதாவே உம்முடைய திருபாதத்தை நாங்கள் நமஸ்கரித்து இந்தச் செபமாலைத் தியானத்தை உமக்குப் பாத காணிக்கையாக வைத்து ஒப்புக்கொடுக்கின்றோம். இதை நீரே கையேற்று உம்முடைய திருக்குமாரனிடத்திலே கையளித்து இதிலே நாங்கள் தியானித்த மறை நிகழ்ச்சிகளுடைய பலனை அடையவும் சுகிரேத போதனையின் படியே நடந்து இவ்வுலகத்திற் சகல விக்கினங்களும் நிவாரணமாகவும் பரலோகத்திலே உம்மோடே உம்முடைய திருக்குமாரனுடைய மோட்சமுக தரிசனையைக் க...