Skip to main content

தூய்மைக்காக இளைஞரின் மன்றாட்டு :

தூய்மைக்காக இளைஞரின் மன்றாட்டு : 

எல்லாம் வல்லவரும்,
அனைத்தையும் காண்கிறவருமான இறைவா,
என் ஆத்துமத்தை உமது திவ்விய இலட்சண சாயலாக
உண்டாக்கினீரே, அதை நான் களங்கப்படுத்தாதபடி எனக்கு
அனுக்கிரகம் செய்தருளும் .
நமது ஆலயத்தை யாதாமொருமன்
அசுசிப்படுத்தினால் அவனைச் சிதைப்போம் என்று
திருவுளம்பற்றினீரே,
சுவாமி ! உமது அருள் வாக்கின்படியே என்
உடலே உமது தேவாலயமாயிற்று,
இதிலே உமது திருவருளினால்
தேவரீருடைய பரிசுத்த ஆவியார் உறைந்திடத் திருவுளம்
கொண்டது மன்றி அநேக முறை உம்முடைய திருக்குமாரனுமாகி
இயேசுநாதரும் தேவநற்கருணை வழியாக எழுந்தருளி வந்து
இதனை அர்ச்சித்தருளினார் . ஆகையால் தூய்மையின் உருவான
இறைவா, உமக்குச் சொந்தமாகிய இத்தேவாலயத்தில் தேவரீர்
மிகுந்த அருவருப்புடனே வெறுக்கிற பாவ அக்கிரமங்களை
வரவிடாதேயும் . தூய்மைக்கு விரோதமான ஓர் அர்ப்ப மாசும் என்
ஆத்துமத்திலாவது உடலிலாவது
உண்டாகாதபடி கிருபைசெய்தருளும் .
என் திவ்விய இரட்சகரான இயேசுவே ! இந்த
விலைமதியாத புண்ணியத்தை அனுசரிக்க
உமது சிறப்பான உதவி வேண்டியிருக்கிறதினால்,
தூய்மையை விரும்புகிறவரும் கன்னியர்களுக்கு
நிறைந்த தயையுள்ள அரசருமாகிய தேவரீர்
பாதத்தில் இந்தத் தூய்மையான புண்ணியத்தைக் கேட்க வருகிறேன் .
உம்முடைய வரப்பிரசாதத்தினால் எத்தனையோ
பேர்கள் இவ்வுலகில் தேவதூதர்களைப் போலத் தூயவர்களாய் நடந்தார்கள் !
அவர்களும் என்னைப் போலப் பலவீனர்களாகத்தானே இருந்தார்கள்,
ஆகையால் என் பலவீனத்தால் நான் தைரியமற்றுப்போக நியாயமில்லை .
மனத்திடம் கொடுக்கிறவராகிய கர்த்தாவே !
தேவரீர் அவர்களை உறுதிப்படுத்தினது போல்
என்னையும் தூய நெறியில் உறுதிப்படுத்தியருளும் .
அவர்களால் ஆனது போல் உம்மைக்
கொண்டு எந்நாளும் எல்லா நலமும் ஆகக்கூடும் .
உமது தோத்திரத்துக்கும் என்
இரட்ச்சணியத்துக்கும் விரோதியாகிய சத்துரு
தன் சோதனையால் என்னை மயக்கி என்
மீது வெற்றிக் கொண்டு விடாதபடி அடியேன் இடைவிடாமல்
சுறுசுறுப்போடே வேண்டிக்கொள்ளவும்,
என்மேலே காவல் காத்து எச்சரிக்கையோடே
நடக்கவும் தயைபுரியும் .
நான் என் புத்தி நினைவைத் திடமாய்
ஒழுங்குபடுத்தி என் பொறிகள்
ஐந்தினையும் எந்நேரமும் அடக்கிப்
பாவ சமயங்களையெல்லாம் தைரியமாக விலக்கி
என்னை அசுத்தப்படுத்துவதானன எல்லாவற்றையும்
மகா அருவருட்னே ஆலோசித்து ஓர் அர்ப்பக்
குற்றத்தின் சாயலுக்கு முதலாய்
அஞ்சி நுணுக்கமான பக்தியுடன்
சுமித்திரையாய் நடந்து மிகப்
புச்சியமும் மழுங்குவதற்கு எளிதுமாகிய
இந்தப் புண்ணியத்தைப் பழுதில்லாமல்
காப்பாற்ற அனுக்கிரகம் செய்தருளும் .
தூய்மைக்கு இருப்பிடமாகிய கன்னித் தாயே,
எனக்கு அடைக்கலமாயிரும் .
அடியேனுக்காக உம்முடைய திருக்குமாரனை மன்றாடியருளும் .
என் காவல் தூதரே,
சோதனையில் என்னைக் கைவிடாமல் காத்தருளும் . - ஆமென்

Comments

Popular posts from this blog

நோயுற்றோர் நலம்பெற செபம் -நோய் வேளை மன்றாட்டு

நோயுற்றோர் நலம்பெற செபம்  இடைவிடா சகாய அன்னையே! பனிமாதாவே இரக்கமுள்ள தாயே, நோயுற்றோரின் பிணிகளை உம் திருமகன் சுமந்துகொண்டார்; தன்னை விசுவாசத்தோடு நாடி வந்தோர்க்கு நலமளித்தார். இதோ நோயுற்றிருக்கும் எங்களை (பெயர்களை சொல்லவும்) கண்நோக்கியருள்ளும். எங்களுடைய பாவங்களையும் பலவீனத்தையும் பாராமல், திருசபையோரின் விசுவாசத்தையும் கண்ணுற்று எங்களுக்கு நலமளிக்க இறைவனை மன்றாடும். நாங்கள் பிணிகளை ஏற்ப்பது இறைவனின் திருவுளமானால் புருமையுடனும், மனமகிழ்வுடனும் ஏற்றுக்கொள்ள மனவுறுதியை பெர்றுதாரும். நோயில் நாங்கள் துவளும் போதும் உம்மைப்போலவே 'இதோ உமது அடிமை, உமது வார்த்தையின்படியே எனக்கு ஆகட்டும்' என்று இன்முகத்தோடு கூறி ஏற்றுக்கொள்ள இறைவனிடமிருந்து வரங்களை பெற்றுத் தந்தருளும். - ஆமென். நோய் வேளை மன்றாட்டு இரக்கமுள்ள குழந்தை இயேசுவே ! நோயாளிகளுக்கு நீர் காட்டிய கருணை எனக்குத் தெரியும் . இவ்வுலகிலே நீர் வாழ்ந்த போது, நோயாளிகளையும், அங்கம் குறைந்தவர்களையும் தீராத நோயால் துன்புற்றோரையும், உமது கனிவான கரத்தால் தொட்டு குணமாக்கினீர் .   இன்று...

சுருக்கமான மனத்துயர் செபம்:

சுருக்கமான மனத்துயர் செபம்: என் இறைவனாகிய தந்தையே! நீர் நன்மை நிறைந்தவர், எனவே எல்லாவற்றிற்கும் மேலாக உம்மை நான் அன்பு செய்கிறேன். என் பாவங்களால் உமது அன்பை மறந்ததற்காக மனம் வருந்துகிறேன். உமது அருளுதவியால் இனிமேல் பாவம் செய்வதில்லையென்று உறுதி கூறுகிறன். ஆமென்.

காணிக்கை ஜெபம்:

காணிக்கை ஜெபம்: இயேசுவின் திரு இருதயமே! நாங்கள் கட்டிக்கொள்ளும் துரோகங்களுக்குப் பரிகாரமாகவும் தேவரீர் திருப்பீடத்தில் ஓயாமல் உம்மைத்தானே பலியாக ஒப்புக்கொடுக்கும் சகல கருத்துக்களுக்காகவும், அடியேல் இன்று செய்யும் ஜெபங்களையும், கிரியைகளையும், படுந்துன்ப வருத்தங்களையும், தூய கன்னிமரியாயின் மாசில்லாத திரு இருதயத்தின் வழியாக உமக்கு ஒப்புக்கோடுக்கிறேன் சுவாமி. இந்த மாதத்திற்கும் இந்த நாளுக்கும் சபையாருக்கும் குறிக்கப்பட்ட சகல கருத்துக்களுக்காகவும் விசேஷமாய் அவைகளை ஒப்புக்கொடுக்கிறேன் சுவாமி -ஆமென். அத்தியந்த மகிமையுள்ள பரலோக இராசேஸ்வரியான பரிசுத்த தேவமாதாவே உம்முடைய திருபாதத்தை நாங்கள் நமஸ்கரித்து இந்தச் செபமாலைத் தியானத்தை உமக்குப் பாத காணிக்கையாக வைத்து ஒப்புக்கொடுக்கின்றோம். இதை நீரே கையேற்று உம்முடைய திருக்குமாரனிடத்திலே கையளித்து இதிலே நாங்கள் தியானித்த மறை நிகழ்ச்சிகளுடைய பலனை அடையவும் சுகிரேத போதனையின் படியே நடந்து இவ்வுலகத்திற் சகல விக்கினங்களும் நிவாரணமாகவும் பரலோகத்திலே உம்மோடே உம்முடைய திருக்குமாரனுடைய மோட்சமுக தரிசனையைக் க...