கிருபைதயாபத்து செபம்
கிருபைதயாபத்துக்கு மாதாவாயிருக்கிற எங்கள் இராக்கினியே வாழ்க,
என் சீவியமே, எங்கள் தஞ்சமே, எங்கள் மதுரமே வாழ்க .
பரதேசிகளாயிருக்கிற நாங்கள் ஏவையின்
மக்கள் உம்மைப் பார்த்துக் கூப்பிடுகிறோம் .
இந்தக் கண்ணீர் கணவாயிலிருந்து பிரலாபித்தழுது
உம்மையே நோக்கி பெருமூச்சு விடுகிறோம் .
ஆதலால் எங்களுக்காக வேண்டி மன்றாடுகிற தாயே,
உம்முடைய தயாளமுள்ள திருக்கண்களை எங்கள்மேல் திருப்பியருளும் .
இதனின்றியே நாங்கள் இந்தப் பிரதேசம் கடந்த
பிற்பாடு உம்முடைய திருவயிற்றின் கனியாகிய
இயேசுநாதருடைய பிரத்தியட்சமான தரிசனத்தை
எங்களுக்குத் தந்தருளும் .கிருபாகரியே தாயாபரியே,
பேரின்ப இரக்கமுள்ள கன்னிமரியே .
ஆமென் .
Comments
Post a Comment