நோயுற்றோர் நலம்பெற செபம் இடைவிடா சகாய அன்னையே! பனிமாதாவே இரக்கமுள்ள தாயே, நோயுற்றோரின் பிணிகளை உம் திருமகன் சுமந்துகொண்டார்; தன்னை விசுவாசத்தோடு நாடி வந்தோர்க்கு நலமளித்தார். இதோ நோயுற்றிருக்கும் எங்களை (பெயர்களை சொல்லவும்) கண்நோக்கியருள்ளும். எங்களுடைய பாவங்களையும் பலவீனத்தையும் பாராமல், திருசபையோரின் விசுவாசத்தையும் கண்ணுற்று எங்களுக்கு நலமளிக்க இறைவனை மன்றாடும். நாங்கள் பிணிகளை ஏற்ப்பது இறைவனின் திருவுளமானால் புருமையுடனும், மனமகிழ்வுடனும் ஏற்றுக்கொள்ள மனவுறுதியை பெர்றுதாரும். நோயில் நாங்கள் துவளும் போதும் உம்மைப்போலவே 'இதோ உமது அடிமை, உமது வார்த்தையின்படியே எனக்கு ஆகட்டும்' என்று இன்முகத்தோடு கூறி ஏற்றுக்கொள்ள இறைவனிடமிருந்து வரங்களை பெற்றுத் தந்தருளும். - ஆமென். நோய் வேளை மன்றாட்டு இரக்கமுள்ள குழந்தை இயேசுவே ! நோயாளிகளுக்கு நீர் காட்டிய கருணை எனக்குத் தெரியும் . இவ்வுலகிலே நீர் வாழ்ந்த போது, நோயாளிகளையும், அங்கம் குறைந்தவர்களையும் தீராத நோயால் துன்புற்றோரையும், உமது கனிவான கரத்தால் தொட்டு குணமாக்கினீர் . இன்று...
three more stanzas are there. Please post that too
ReplyDelete