Skip to main content

கத்தோலிக்க ஜெபங்கள் - Catholic Prayers


கத்தோலிக்க ஜெபங்கள்:

சிலுவை அடையாளம்

அர்ச்சியஸ்ட சிலுவைடையாளத்தினாலே எங்கள் சத்துருக்கள் இடத்திலிருந்து எங்களை இரட்சித்துக்கொள்ளும் எங்கள் சருவேசுரா பிதா சுதன் பரிசுத்த ஆவியின் பெயராலே ஆமென்.


விசுவாசப் பிரமாணம்

பரலேகத்தையும் பூலோகத்தையும் படைத்த எல்லாம் வல்ல பிதாவாகிய சருவேசுரனை விசுவசிக்கின்றேன். அவருடைய ஏக சுதனாகிய நம்முடைய நாயகன் இயேசுகிறிஸ்துவையும் விசுவசிக்கின்றேன்.இவர் பரிசுத்த ஆவியினால் கற்பமாய் உற்பவித்து கன்னிமரியாளிடம் இருந்து பிறந்து போஞ்சுபிலாத்தின் அதிகாரத்தில் பாடுபட்டு சிலுவையில் அறையுண்டு மரித்து அடக்கம் செய்யப்பட்டு பாதாளத்தில் இறங்கி மூன்றாம் நாள் மரித்தோரிடம் இருந்து உயிர்த்தெழுந்தார்.பரலோகத்திற்கு எழுந்தருளி எல்லாம் வல்ல பிதாவாகிய சருவேசுரனுடைய வலது பக்கத்தில் வீற்றிருக்கின்றார்.அவ்விடத்திலிருந்து 
சீவியரையும் மரித்தவரையும் நடுதீர்க்கவருவார்.பரிசுத்த ஆவியை விசுவசிக்கின்றேன்.பரிசுத்த கத்தோலிக்க திருச்சபையை விசுவசிக்கின்றேன்.புனிதர்களின் சமூதீதப் பிரயோசனத்தை விசுவசிக்கின்றேன்.
பாவப் பொறுத்தலை விசுவசிக்கின்றேன். சரிர உத்தானத்தை விசுவசிக்கின்றேன். நித்திய சீவியத்தை விசுவசிக்கின்றேன். ஆமென்.


இயேசு கற்பித்த செபம்

பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே உம்முடைய நாமம் அர்ச்சிக்கப்படுவதாக, உம்முடைய இராச்சியம் வருக. உம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யப் படுவது போல புலோகத்திலும் செய்யப்படுவதாக. 
எங்கள் அனுதின உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும். எங்களுக்கு தீமை செய்தவர்களை நாங்கள் பொருப்பது போல எங்கள் பாவங்களை பொறுத்தருளும். எங்களை சோதனையில் விழவிடாதேயும். 
தீமையில் இருந்து எங்களை இரட்சித்தருளும். ஆமென்.


மங்கள வார்த்தை செபம்


அருள் நிறைந்த மரியாயே வாழ்க கர்த்தர் உம்முடனே பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவள் நீரே உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசீர்வதிக்கப்பட்டவரே,
அர்ச்சியேஸ்ட மரியாயே சருவேசுரனுடைய மாதாவே பாவிகளாயிருக்கிற எங்களுக்காக இப்பொழுதும் எங்கள் மரண நேரத்திலும் வேண்டிக்கொள்ளும். ஆமென

திரித்துவப் புகழ்



பிதாவுக்கும் சுதனுக்கும் பரிசுத்த ஆவிக்கும் மகிமை உண்டாவதாக. ஆதியிலே இருந்தது போல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக ஆமென்
ஓ என் இயேசுவே எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும். எங்களை நரக நெருப்பிலிருந்து இரட்சித்தருளும். சகல ஆத்துமாக்களையும் பரலோக பாதையில் நடத்தியருளும். உமது இரக்கம் அதிகமாய் வேண்டியவர்களுக்கு விசேட உதவி செய்தருளும்.

காணிக்கை செபம்


அத்தியந்த மகிமையுள்ள பரலோக இராசேஸ்வரியான பரிசுத்த தேவமாதாவே உம்முடைய திருபாதத்தை நாங்கள் நமஸ்கரித்து இந்தச் செபமாலைத் தியானத்தை உமக்குப் பாத காணிக்கையாக வைத்து ஒப்புக்கொடுக்கின்றோம். இதை நீரே கையேற்று உம்முடைய திருக்குமாரனிடத்திலே கையளித்து இதிலே நாங்கள் தியானித்த மறை நிகழ்ச்சிகளுடைய பலனை அடையவும் சுகிரேத போதனையின் படியே நடந்து இவ்வுலகத்திற் சகல விக்கினங்களும் நிவாரணமாகவும் பரலோகத்திலே உம்மோடே உம்முடைய திருக்குமாரனுடைய மோட்சமுக தரிசனையைக் கண்டு களிகூர்ந்திருக்கவும் ஒத்தாசை பண்ணியருளும் தாயாரே. ஆமென


கிருபைதாயாபரத்துச் செபம்



கிருபைதயாபரத்துக்கு மாதாவாயிருக்கிற எங்கள் இராக்கினியே வாழ்க எங்கள் சீவமே எங்கள் மதுரமே எங்கள் தஞ்சமே வாழ்க பரதேசிகளாய் இருக்கிற நாங்கள் ஏவையின் மக்கள் உம்மைப் பார்த்து கூப்பிடுகின்றோம். இந்தக் கண்ணீர் கனவாயிலிருந்து பிரலாபித்து அழுது உம்மையே நோக்கிப் பெருமூச்சுவிடுகின்றோம்.ஆதலால் எங்களுக்காக வேண்டி மன்றாடுகின்ற தாயே உம்முடைய தாயாபரமுள்ள திருக்கண்களை எங்கள் மேலே திருப்பியருளும். இதனன்றியே நாங்கள் இந்தப் பிரதேசங் கடந்த பிற்பாடு
உம்முடைய திருக்குமாரனாகிய இயேசு நாதருடைய பிரத்தியட்சமான தரிசனத்தை எங்களுக்கு தந்தருளும். கிருபாகரியே தயாபரியே பேரின்ப இரசமுள்ள கன்னி மரியாய 
முதல்: இயேசுகிறிஸ்து நாதருடைய திருவாக்குத்தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரமாயிருக்கத்தக்கதாக.
துணை: சாருவேசுரனுடைய பரிசுத்த தேவமாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

செபிப்போமா



சர்வ சக்தியுடையவருமாய் நித்தியருமாய் இருக்கிற சருவேசுரா முத்துபேறுபெற்ற கன்னித்தாயான மரியாளுடைய ஆத்துமமும் சரீரமும் பரிசுத்த ஆவியின் அனுக்கிரகத்தினாலே தேவதாயாருடைய திருக்குமாரனுக்கு யோக்கியமான பீடமாய் இருக்க,ஏற்கனவே நியமித்தருளினீரே. இந்தத் திவ்விய தாயை நினைத்து மகிழ்கின்ற நாங்கள் அவளுடைய இரக்கமுள்ள மன்றாட்டியாலே இவ்வுலகின் சகல பொல்லாப்புக்களிலேயும் நித்திய மரணத்திலேயும் நின்று இரட்சிக்கப்படும் படிக்கு கிருபை கூர்ந்தருளும்
இந்த மன்றாட்டுக்களை எல்லாம் எங்கள் ஆண்டவராகிய இயேசு நாதருடைய திருமுகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருளும். ஆமென


மூவேளைச் செபம்


ஆண்டவருடைய தூதர் மரியாளுக்குத் தூதுரைத்தார். அவளும் தூய ஆவியினால் கருத்தரித்தாள். 
அருள் நிறைந்த...

இதோ ஆண்டவருடைய அடிமை உமது வார்த்தையின் படியே எனக்கு ஆகட்டும்
அருள் நிறைந்த...

வார்த்தை மனுவுருவானார் நம்மிடையே குடிகொண்டார்.
அருள் நிறைந்த...

முதல்வர்: கிறிஸ்துவிள் வாக்குத்தத்தங்களுக்கு நாங்கள் தகுதியுடையவர்களாய் இருக்கும்படியா
எல்லோ: இறைவனின் தூய அன்னையே எங்களுக்காக மன்றாடும்.
செபிப்போமா



இறைவா உமது திருமகன் கிறிஸ்து மனுவுருவானதை உமது வானதூதர் வழியாக அறிந்திருக்கிறோம். அவருடைய பாடுகளினாலும் சிலுவையினாலும் 
நாங்கள் உயிர்ப்பின் மகிமையை அடையுமாறு உமது அருளை எங்கள் உள்ளத்தில் பொழிய வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். ஆமென


புனித மிக்கேல் தேவதூதரை நோக்கி செபம்

அதிதூதரான புனித மிக்கேலே யுத்த நாளில் எங்களை தற்காத்தருளும். பசாசின் துஸ்டதனத்தில் இருந்தும் அதன் கண்களில் இருந்தும் எம்மை பாதுகாத்தருளும்.இறைவன் அதை கடிந்து கொள்ளும் படி தாழ்மையுடன் மன்றாடுகின்றோம். வானுக சேனைக்கு அதிபதியாயிருக்கிற நீர் ஆத்துமாக்களை நாசம் செய்யும் படியாக உலகெங்கும் சுத்தி திரியும் சாத்தானையும் அதன் பசாசுக்களையும் தேவ வல்லமையை கொண்டு நரக பாதளத்தில் தள்ளி விடும். ஆமென்.

Comments

Popular posts from this blog

நோயுற்றோர் நலம்பெற செபம் -நோய் வேளை மன்றாட்டு

நோயுற்றோர் நலம்பெற செபம்  இடைவிடா சகாய அன்னையே! பனிமாதாவே இரக்கமுள்ள தாயே, நோயுற்றோரின் பிணிகளை உம் திருமகன் சுமந்துகொண்டார்; தன்னை விசுவாசத்தோடு நாடி வந்தோர்க்கு நலமளித்தார். இதோ நோயுற்றிருக்கும் எங்களை (பெயர்களை சொல்லவும்) கண்நோக்கியருள்ளும். எங்களுடைய பாவங்களையும் பலவீனத்தையும் பாராமல், திருசபையோரின் விசுவாசத்தையும் கண்ணுற்று எங்களுக்கு நலமளிக்க இறைவனை மன்றாடும். நாங்கள் பிணிகளை ஏற்ப்பது இறைவனின் திருவுளமானால் புருமையுடனும், மனமகிழ்வுடனும் ஏற்றுக்கொள்ள மனவுறுதியை பெர்றுதாரும். நோயில் நாங்கள் துவளும் போதும் உம்மைப்போலவே 'இதோ உமது அடிமை, உமது வார்த்தையின்படியே எனக்கு ஆகட்டும்' என்று இன்முகத்தோடு கூறி ஏற்றுக்கொள்ள இறைவனிடமிருந்து வரங்களை பெற்றுத் தந்தருளும். - ஆமென். நோய் வேளை மன்றாட்டு இரக்கமுள்ள குழந்தை இயேசுவே ! நோயாளிகளுக்கு நீர் காட்டிய கருணை எனக்குத் தெரியும் . இவ்வுலகிலே நீர் வாழ்ந்த போது, நோயாளிகளையும், அங்கம் குறைந்தவர்களையும் தீராத நோயால் துன்புற்றோரையும், உமது கனிவான கரத்தால் தொட்டு குணமாக்கினீர் .   இன்று...

சுருக்கமான மனத்துயர் செபம்:

சுருக்கமான மனத்துயர் செபம்: என் இறைவனாகிய தந்தையே! நீர் நன்மை நிறைந்தவர், எனவே எல்லாவற்றிற்கும் மேலாக உம்மை நான் அன்பு செய்கிறேன். என் பாவங்களால் உமது அன்பை மறந்ததற்காக மனம் வருந்துகிறேன். உமது அருளுதவியால் இனிமேல் பாவம் செய்வதில்லையென்று உறுதி கூறுகிறன். ஆமென்.

காணிக்கை ஜெபம்:

காணிக்கை ஜெபம்: இயேசுவின் திரு இருதயமே! நாங்கள் கட்டிக்கொள்ளும் துரோகங்களுக்குப் பரிகாரமாகவும் தேவரீர் திருப்பீடத்தில் ஓயாமல் உம்மைத்தானே பலியாக ஒப்புக்கொடுக்கும் சகல கருத்துக்களுக்காகவும், அடியேல் இன்று செய்யும் ஜெபங்களையும், கிரியைகளையும், படுந்துன்ப வருத்தங்களையும், தூய கன்னிமரியாயின் மாசில்லாத திரு இருதயத்தின் வழியாக உமக்கு ஒப்புக்கோடுக்கிறேன் சுவாமி. இந்த மாதத்திற்கும் இந்த நாளுக்கும் சபையாருக்கும் குறிக்கப்பட்ட சகல கருத்துக்களுக்காகவும் விசேஷமாய் அவைகளை ஒப்புக்கொடுக்கிறேன் சுவாமி -ஆமென். அத்தியந்த மகிமையுள்ள பரலோக இராசேஸ்வரியான பரிசுத்த தேவமாதாவே உம்முடைய திருபாதத்தை நாங்கள் நமஸ்கரித்து இந்தச் செபமாலைத் தியானத்தை உமக்குப் பாத காணிக்கையாக வைத்து ஒப்புக்கொடுக்கின்றோம். இதை நீரே கையேற்று உம்முடைய திருக்குமாரனிடத்திலே கையளித்து இதிலே நாங்கள் தியானித்த மறை நிகழ்ச்சிகளுடைய பலனை அடையவும் சுகிரேத போதனையின் படியே நடந்து இவ்வுலகத்திற் சகல விக்கினங்களும் நிவாரணமாகவும் பரலோகத்திலே உம்மோடே உம்முடைய திருக்குமாரனுடைய மோட்சமுக தரிசனையைக் க...