Skip to main content

வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பத்து கட்டளைகள் -Ten Commandments in Tamil


வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பத்து கட்டளைகள்




  1. நானே உன் கடவுளாகிய ஆண்டவர் 
  2. என்னைத் தவிர வேறு தெய்வங்கள் உனக்கிருத்தல் ஆகாது 
  3. (...) யாதொன்றின் சிலையையோ ஓவியத்தையோ நீ உருவாக்க வேண்டாம் 
  4. உன் கடவுளாகிய ஆண்டவரின் பெயரை வீணாகப் பயன்படுத்தாதே 
  5. ஓய்வு நாளைத் தூயதாகக் கடைப்பிடிப்பதில் கருத்தாயிரு 
  6. உன் தந்தையையும் உன் தாயையும் மதித்து நட 
  7. கொலை செய்யாதே 
  8. விபசாரம் செய்யாதே 
  9. களவு செய்யாதே 
  10. பிறருக்கு எதிராகப் பொய்ச்சான்று சொல்லாதே 
  11. பிறர் மனைவியை கவர்ந்திட விரும்பாதே 
  12. பிறர்க்குரியது எதையுமே கவர்ந்திட விரும்பாதே 

கத்தோலிக்க திருச்சபையில் 10 கட்டளைகள்:
முதலாவது எல்லாவற்றிற்கும் மேலாக கடவுளை அன்பு செய்வது. (இறையன்பு கட்டளைகள்: 3)

  1. நாமே உன் கடவுளாகிய ஆண்டவர். எம்மைத் தவிர வேறு தெய்வங்கள் உனக்கு இருத்தல் ஆகாது. (1)
  2. உன் கடவுளாகிய ஆண்டவரின் பெயரை வீணாகப் பயன்படுத்தாதே. (2)
  3. ஆண்டவரின் நாளைத் தூயதாகக் கடைப்பிடிப்பதில் கருத்தாய் இரு. (3)
இரண்டாவது தன்னை அன்பு செய்வது போல பிறரையும் அன்பு செய்வது. (பிறரன்பு கட்டளைகள்7)
  1. உன் தந்தையையும் தாயையும் மதித்து நட. (4)
  2. கொலை செய்யாதே. (5)
  3. விபசாரம் செய்யாதே. (6)
  4. களவு செய்யாதே. (7)
  5. பிறருக்கு எதிராகப் பொய்ச்சான்று சொல்லாதே. (8)
  6. பிறர் மனைவிமீது ஆசை கொள்ளாதே. (9)
  7. பிறருக்கு உரியது எதையும் கவர்ந்திட விரும்பாதே. (10)




சீர்த்திருத்த சபைகளில் 10 கட்டளைகள்:

சீர்த்திருத்த திருச்சபைகள் பல காணப்படுகின்ற காரணத்தினால் அவை எல்லாவற்றினதும் கருத்துக்களை ஒன்றாக தொகுப்பது கடினமான விடயமாகும். பின்வருவன லூதரன் திருச்சபைகள் தவிர்ந்த ஏனைய திருச்சபைகளின் பொதுவான நோக்காகும்.
முகவுரை: 20:1-2 [6]
இது கட்டளைகளை ஏன் இசுரயேலர் கைக்கொள்ள வேண்டும் என்பதை சுட்டி நிற்கிறது.

  1. வசனம் 20:3 [7]
    இங்கு அன்னிய கடவுள்களை வணங்குதலை தடுக்கும் கட்டளையாகும். இங்கு வணங்குதல் மட்டுமல்லாது அன்னிய தெய்வங்களை மரியாதை செய்தல் போன்றவையும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
  2. வசனங்கள் 20:4-6 [8]
    இவ்வசனங்கள் இரண்டும் சேர்த்து இரண்டாவது கட்டளையாக கொள்ளப்படுகிறது. இங்கு கடவுளை சிலைகளூடாக வழிபடுவது தடைசெய்யப்படுகிறது. இங்கு சிலைகளோ அல்லது வேறு உயிரினங்களையோ கடவுளாக கருதுவது பாவச்செயலாகச் சுட்டப்படுகிறது.
  3. வசனம் 20:7 [9]
    இதில் கடவுளின் பெயர், அவரது செயல்கள், வசனங்கள் போன்றவற்றிற்கு புனிதத் தன்மை கொடுக்கப்பட்டு அவற்றை வீணாக உச்சரிக்காமல் இருப்பதை உறுதி செய்கிறது. இது சத்தியம் செய்வதற்கு எதிரான கட்டளையாக சிலரால் கொள்ளப்படுகிறது.
  4. வசனங்கள் 20:8-11 [10]
    இம்மூன்று வசனங்களும் சேர்த்து கடவுள் வழிபாட்டுக்கு நேரத்தை ஒதுக்க வேண்டும் என்ற நான்காவது கட்டளையாகக் கொள்ளப்படுகின்றது. இது வாரத்தின் இறுதிநாளை கடவுளுக்காக ஒதுக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.
  5. வசனங்கள் 20:12 [11]
    இக்கட்டளை ஒன்றே நேரடியாக செய்யவேண்டியதை சுட்டுகிறது. இது பெற்றோரை மதித்து மரியாதை அளிப்பதன் முக்கியத்துவத்தை விளக்குகிறது.
  6. வசனங்கள் 20:13 [12]
    இது மனித உயிரின் மாண்பினை விளக்குகிறது. இக்கட்டளையால் மனித உயிரை மாய்ப்பது, அல்லது மனித உயிருக்கு ஊறு இழைப்பது போன்றவை தடைசெய்யப்படுகின்றன.
  7. வசனங்கள் 20:14 [13]
    இதன் மூலமாக மற்றைவர்ள் மீதான காம எண்ணங்களும் அவை தொடர்பான நடவடிகைகளும் தடைசெய்யப்படுகின்றன.
  8. வசனங்கள் 20:15 [14]
    திருடலுக்கு எதிரான கட்டளையாகும். இதன் மூலம் சட்டப்படி நம்முடையவைகள் தவிர்த்த ஏனையவற்றை சட்டவிரோதமான முறையில் சேர்ப்பது தடைசெய்யப்படுகிறது.
  9. வசனங்கள் 20:16 [15]
    இது மக்களிடையே உண்மைபேசப்படுவதன் முக்கியத்துவதை கூறுகின்றது. முக்கியமாக ஏதாவது ஒரு சம்பவத்துக்கு சாட்சியாக இருக்கும் போது உண்மையை பேசவேண்டியதன் முக்கியத்துவதை சுட்டுகிறது.
  10. வசனங்கள் 20:17 [16]
    தனதல்லாத வேறு நபர் ஒருவரின் உடைமைகளையோ அல்லது அவரது துணைவரையோ( மனைவி, கணவன்) பெற்றுக்கொள்ளும் படி விரும்புவதை இக்கட்டளை தடைசெய்கிறது.

Comments

Post a Comment

Popular posts from this blog

நோயுற்றோர் நலம்பெற செபம் -நோய் வேளை மன்றாட்டு

நோயுற்றோர் நலம்பெற செபம்  இடைவிடா சகாய அன்னையே! பனிமாதாவே இரக்கமுள்ள தாயே, நோயுற்றோரின் பிணிகளை உம் திருமகன் சுமந்துகொண்டார்; தன்னை விசுவாசத்தோடு நாடி வந்தோர்க்கு நலமளித்தார். இதோ நோயுற்றிருக்கும் எங்களை (பெயர்களை சொல்லவும்) கண்நோக்கியருள்ளும். எங்களுடைய பாவங்களையும் பலவீனத்தையும் பாராமல், திருசபையோரின் விசுவாசத்தையும் கண்ணுற்று எங்களுக்கு நலமளிக்க இறைவனை மன்றாடும். நாங்கள் பிணிகளை ஏற்ப்பது இறைவனின் திருவுளமானால் புருமையுடனும், மனமகிழ்வுடனும் ஏற்றுக்கொள்ள மனவுறுதியை பெர்றுதாரும். நோயில் நாங்கள் துவளும் போதும் உம்மைப்போலவே 'இதோ உமது அடிமை, உமது வார்த்தையின்படியே எனக்கு ஆகட்டும்' என்று இன்முகத்தோடு கூறி ஏற்றுக்கொள்ள இறைவனிடமிருந்து வரங்களை பெற்றுத் தந்தருளும். - ஆமென். நோய் வேளை மன்றாட்டு இரக்கமுள்ள குழந்தை இயேசுவே ! நோயாளிகளுக்கு நீர் காட்டிய கருணை எனக்குத் தெரியும் . இவ்வுலகிலே நீர் வாழ்ந்த போது, நோயாளிகளையும், அங்கம் குறைந்தவர்களையும் தீராத நோயால் துன்புற்றோரையும், உமது கனிவான கரத்தால் தொட்டு குணமாக்கினீர் .   இன்று...

சுருக்கமான மனத்துயர் செபம்:

சுருக்கமான மனத்துயர் செபம்: என் இறைவனாகிய தந்தையே! நீர் நன்மை நிறைந்தவர், எனவே எல்லாவற்றிற்கும் மேலாக உம்மை நான் அன்பு செய்கிறேன். என் பாவங்களால் உமது அன்பை மறந்ததற்காக மனம் வருந்துகிறேன். உமது அருளுதவியால் இனிமேல் பாவம் செய்வதில்லையென்று உறுதி கூறுகிறன். ஆமென்.

காணிக்கை ஜெபம்:

காணிக்கை ஜெபம்: இயேசுவின் திரு இருதயமே! நாங்கள் கட்டிக்கொள்ளும் துரோகங்களுக்குப் பரிகாரமாகவும் தேவரீர் திருப்பீடத்தில் ஓயாமல் உம்மைத்தானே பலியாக ஒப்புக்கொடுக்கும் சகல கருத்துக்களுக்காகவும், அடியேல் இன்று செய்யும் ஜெபங்களையும், கிரியைகளையும், படுந்துன்ப வருத்தங்களையும், தூய கன்னிமரியாயின் மாசில்லாத திரு இருதயத்தின் வழியாக உமக்கு ஒப்புக்கோடுக்கிறேன் சுவாமி. இந்த மாதத்திற்கும் இந்த நாளுக்கும் சபையாருக்கும் குறிக்கப்பட்ட சகல கருத்துக்களுக்காகவும் விசேஷமாய் அவைகளை ஒப்புக்கொடுக்கிறேன் சுவாமி -ஆமென். அத்தியந்த மகிமையுள்ள பரலோக இராசேஸ்வரியான பரிசுத்த தேவமாதாவே உம்முடைய திருபாதத்தை நாங்கள் நமஸ்கரித்து இந்தச் செபமாலைத் தியானத்தை உமக்குப் பாத காணிக்கையாக வைத்து ஒப்புக்கொடுக்கின்றோம். இதை நீரே கையேற்று உம்முடைய திருக்குமாரனிடத்திலே கையளித்து இதிலே நாங்கள் தியானித்த மறை நிகழ்ச்சிகளுடைய பலனை அடையவும் சுகிரேத போதனையின் படியே நடந்து இவ்வுலகத்திற் சகல விக்கினங்களும் நிவாரணமாகவும் பரலோகத்திலே உம்மோடே உம்முடைய திருக்குமாரனுடைய மோட்சமுக தரிசனையைக் க...