Skip to main content

Posts

கிருபைதயாபத்து செபம்

கிருபைதயாபத்து செபம் கிருபைதயாபத்துக்கு மாதாவாயிருக்கிற எங்கள் இராக்கினியே வாழ்க, என் சீவியமே, எங்கள் தஞ்சமே, எங்கள் மதுரமே வாழ்க . பரதேசிகளாயிருக்கிற நாங்கள் ஏவையின் மக்கள் உம்மைப் பார்த்துக் கூப்பிடுகிறோம் . இந்தக் கண்ணீர் கணவாயிலிருந்து பிரலாபித்தழுது உம்மையே நோக்கி பெருமூச்சு விடுகிறோம் . ஆதலால் எங்களுக்காக வேண்டி மன்றாடுகிற தாயே, உம்முடைய தயாளமுள்ள திருக்கண்களை எங்கள்மேல் திருப்பியருளும் . இதனின்றியே நாங்கள் இந்தப் பிரதேசம் கடந்த பிற்பாடு உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுநாதருடைய பிரத்தியட்சமான தரிசனத்தை எங்களுக்குத் தந்தருளும் .கிருபாகரியே தாயாபரியே, பேரின்ப இரக்கமுள்ள கன்னிமரியே . ஆமென் .

நீண்ட மனத்துயர் செபம்:

நீண்ட மனத்துயர் செபம்: என் சர்வேசுரா சுவாமி தேவரீர் அளவில்லாத சகல நன்மையும் அன்பும் நிறைந்தவராய் இருப்பதினால் எல்லாவற்றிற்கும் மேலாக உம்மை நான் முழுமனதுடனே நேசிக்கிறேன். இப்படிப்பட்ட தேவரீர்க்குப் பொருந்தாத பாவங்களைச் செய்தேனே என்று மிகவும் மனம் நொந்து மெத்த மனஸ்தாபப்படுகிறேன். எனக்கிதுவே மனஸ்தாபம் இல்லாமல் வேறு மனஸ்தாபமில்லை. எனக்கிதுவே துக்கமில்லாமல் வேறு துக்கமில்லை. இனிமேல் ஒருபொழுதும் இப்படிப்பட்ட பாவங்களைச் செய்வதில்லை என்று உறுதியான மனதுடனே பிரதிக்கினை செய்கிறேன். மேலும் எனக்குப் பலன் போதாமையால் இயேசுநாதர் சுவாமி பாடுபட்டு சிந்தின திருஇரத்தப் பலன்களையெல்லாம் பார்த்து, என் பாவங்களை எல்லாம் பொறுத்து, எனக்கு உம்முடைய வரப்பிரசாதங்களையும், மோட்ச பாக்கியத்தையும் தந்தருள்வீரென்று முழுமனதுடனே நம்பியிருக்கிறேன். திருச்சபை விசுவசித்து கற்பிக்கின்ற சத்தியங்களை எல்லாம் தேவரீர் தாமே அறிவித்த படியினால் நானும் உறுதியாக விசுவசிக்கின்றேன் -ஆமென்.

மூவேளைச் செபம்

மூவேளைச் செபம்  ஆண்டவருடைய தூதர் மரியாளுக்கு தூதுரைத்தார். தூய ஆவியால் அவள் கருத்தாங்கினாள். - அருள் நிறை... இதோ ஆண்டவரின் அடிமை. உமது சொற்படியே எனக்கு ஆகட்டும். - அருள் நிறை... வாக்கு மனிதனானார். நம்மிடையே குடிகொண்டார். - அருள் நிறை... கிறிஸ்துவின் வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதி பெறும்படி இறைவனின் தூய அன்னையே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இயேசு கற்றுத் தந்த இறை வேண்டல்

இயேசு கற்றுத் தந்த இறை வேண்டல்  விண்ணகத்தில் இருக்கின்ற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயது எனப் போற்றப்பெறுக, உமது ஆட்சி வருக, உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல, மண்ணுலகிலும் நிறைவேறுக, எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும், எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பது போல, எங்கள் குற்றங்களை மன்னியும்,எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும், தீயோனிடமிருந்து விடுவித்தருளும் - ஆமென்.

தூய ஆவியை நோக்கிய செபம்

தூய ஆவியை நோக்கிய செபம்  தூய ஆவியே என் ஆருயிரே உம்மை ஆராதிக்கிறேன். என்னில் ஒளியேற்றி என்னை வழிநடத்தும். எனக்கு திடமளித்து என்னை தேற்றும் நான் செய்யவேண்டியதைச் சொல்லும். ஆணையிடும். உமது திட்டத்தை தெயப்படுத்தினால் போதும் எனக்கு நடக்க வேண்டுமென்று நீர் விரும்புவதை நான் அன்புடன் ஏற்று அடிபணிகிறேன். - கர்தினால் மெர்சியா

ஜெபிக்கலாம் வாங்க - அனுதின ஜெபம் (ஞாயிறு-சனிக்கிழமை)

ஜெபிக்கலாம் வாங்க - அனுதின ஜெபம்  ஞாயிறு திரிகால செபம் கர்த்தர் கற்பித்த செபம் இரக்கமுள்ள புனித இறைவா ! புதிய நாள் துவங்கி உள்ளது . எனக்கொரு புதிய நாளை கொடுத்துள்ளீர் . புதிய வாழ்வைக்கொடையாக கொடுத்தமைக்கு நன்றி . நான் உம்மை அறிந்தமைக்கு ,வாழ்வின் அனைத்துக் கொடைகளுக்கும் நன்றி . மிகவும் சிறப்பாக எப்போதும், எல்லா நேரங்களிலும் என்னை நினைத்தமைக்கு அன்பு செய்தமைக்கும் நன்றி . என் மனதை இன்ப படுத்தியமைக்கு நன்றி .எனவே என்னுடைய இந்த நாளையும் , சொல் , சிந்தனை அனைத்தையும் உமக்கு அர்ப்பணிக்கிறான் . என் அமைதி ,இன்ப துன்பங்கள் அனைத்தையும் உமக்கு அர்ப்பணிக்கிறான் . எது நல்லது?எது கெட்டது?என்பதை எனக்கு தெளிவுப்படுத்தும் .இதனால் நான் உன் சித்தத்தை நிறைவேற்றுவனாக .நான் உம்மை எப்போதும் நினைத்து வாழ அருள் தாரும் .இதனால் நான் என் மனச்சன்றிர்க்கும் , அதன் உறுத்துதளுக்கும் முழு ஒத்துழைப்புடன் என் பிழைகளை குறைத்து வாழ்வேனாக . சோதனைகளை எதிர்த்துப் பாவத்தை குறைத்து வாழ பலம் தாரும். என் குறைகள் ,சோம்பலை ஒழிக்க எனக்கு உதவி செய்யும் உள்ளத்தைத் தாரும ,இந்நாள...

எழுந்தார் இறைவன் - Ezunthaar iraivan song Lyrics

எழுந்தார் இறைவன் பல்லவி எழுந்தார் இறைவன் - ஜெயமே ஜெயமெனவே எழுந்தார் இறைவன் சரணங்கள் 1. சாவின் பயங்கரத்தை ஒழிக்கக் - கெட்ட  ஆவியின் வல்லமையை அழிக்க - இப்  பூவின்மீது சபை செழிக்க --- எழுந்தார் 2. செத்தவர் மீண்டுமே பிழைக்க - உயர்  நித்திய ஜீவனை அளிக்கத் - தேவ பக்தர் யாவரும் களிக்க --- எழுந்தார் 3. விழுந்தவரைக் கரையேற்றப் - பாவத் தெழுந்து மனுக்குலத்தை மாற்ற - விண்ணுக் கெழுந்து நாம் அவரையே போற்ற --- எழுந்தார் 4. கருதிய காரியம் வாய்க்கத் - தேவ சுருதி மொழிகளெல்லாம் காக்க - நம் இரு திறத்தாரையும் சேர்க்க --- எழுந்தார் Video: