Skip to main content

அன்பனே விரைவில் வா உன் அடியேனைத் தேற்ற வா


அன்பனே விரைவில் வா உன் 

அடியேனைத் தேற்ற வா
photo



அன்பனே விரைவில் வா உன் அடியேனைத் தேற்ற வா

/heart1. பாவச் சுமையால் பதறுகிறேன் 
பாதை அறியாது வருந்துகிறேன் - 2 
பாதை காட்டிடும் உன்னையே நான் - 2 
பாதம் பணிந்து வேண்டுகிறேன்

/heart2. அமைதி வாழ்வைத் தேடுகிறேன் 
அருளை அளிக்க வேண்டுகிறேன் - 2 
வாழ்வில் உணவே உன்னையே நான் - 2 
வாழ்வு அளிக்க வேண்டுகிறேன்

/heart3. இருளே வாழ்வில் பார்க்கிறேன் 
இதயம் நொந்து அழுகிறேன் - 2 
ஒளியாய் விளங்கும் உன்னையே நான் - 2 
வழியாய் ஏற்றுக் கொள்ளுகிறேன்

/heart4. ஏழ்மை நிலையில் இருக்கிறேன் 
என்பு உருகிக் கிடக்கிறேன் - 2 
வாழ்வின் விளக்கே உன்னையே நான் - 2 
வாழ்வின் துணையாய் பெறுகிறேன்

Comments