Skip to main content

Posts

இயேசு கற்றுக் கொடுத்த ஜெபம்

இயேசு கற்றுக் கொடுத்த   ஜெபம்   பரமண்டலங்களில் இருக்கிற எங்கள் பிதாவே உம்முடைய நாமம் பரிசுத்தப் படுவதாக.உம்முடைய ராஜ்ஜியம் வருவதாக;உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்ய படுவது போல பூமியிலும் செய்யப்படுவதாக. எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை எங்களுக்கு இன்று தாரும்.எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை மன்னியும். எங்களைச் சோதனைக்குட்படப் பண்ணாமல்,தீமையினின்று எங்களை இரட்சித்துக் கொள்ளும், ராஜ்யமும்,வல்லமையும்,மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே, ஆமென். - மத்தேயு - 6:9-13 /* Video: கத்தோலிக்க முறைப்படி: பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே உம்முடைய நாமம் அர்ச்சிக்கப்படுவதாக, உம்முடைய இராச்சியம் வருக. உம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யப் படுவது போல புலோகத்திலும் செய்யப்படுவதாக.  எங்கள் அனுதின உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும். எங்களுக்கு தீமை செய்தவர்களை நாங்கள் பொ று ப்ப து போல எங்கள் பாவங்களை பொறுத்தருளும். எங்களை சோதனையில் விழவிடாதேயும்.  தீமையில் இருந்து எங்களை இரட்சித்தருளு...

அக்னி ஜூவாலை ஆக்கும் தேவா - Agni Jwalai Aakkum Deva Lyrics

அக்னி ஜூவாலை ஆக்கும் தேவா   அக்னி ஜூவாலை ஆக்கும் தேவா  கொழுந்து விட்டெரிய ஊற்றும் தேவா...(2) பாவம் நெருங்கா அக்கினியாய்  சாத்தானை எதிர்க்க உதவும் தேவா...(2) அல்லேலூயா பாடுவேன் ...(4) -அக்னி ஜூவாலை   எலியாவின் அக்கினி இறங்கட்டுமே  வானம் திறந்து பொழியட்டுமே...(2) கர்த்தரே தேவன் என்று அறியட்டுமே  சாத்தானின் சாதிகள் சரியட்டுமே...(2) அல்லேலூயா பாடுவேன் ...(4) -அக்னி ஜூவாலை   பாவத்தின் கறைகள் நீங்கட்டுமே  சாபத்தின் முகங்கள் முரியட்டுமே...(2) இயேசுவின் நாமத்தில் ஜெயம் எடுத்தே  வெற்றியின் கீதங்கள் பாடிடுவேன்...(2) அல்லேலூயா பாடுவேன் ...(4) -அக்னி ஜூவாலை   கர்த்தரின் வல்லமை இறங்கட்டுமே  கர்த்தரின் நாமம் ஓங்கட்டுமே...(2) ஜாதி ஜனங்கள் அசையட்டுமே  சபைகள் பெருகி வளரட்டுமே ...(2) அல்லேலூயா பாடுவேன் ...(4) -அக்னி ஜூவாலை  Video:

ஒளி வீசும் என் ஏசுவே -Oli veesum en Yesuve Lyrics

ஒளி வீசும் என் ஏசுவே ஒளி வீசும் என் ஏசுவே மண்ணகம் உம் பாத்திரம்  களி மண்ணாம் என்னையுமே குயவனை வனைகின்றாயே (2) சோதனை  வேளையிலும் சோர்ந்திடும்  நேரத்திலும் (2) தாங்கிடும் என் நேசரே மாவரம் நீர் தான் ஐயா -ஒளி வீசும்  பெற்றவர் கைவிட்டாலும் உற்றவர் பழித்திட்டாலும் (2) உன் நேசம் எனை தேற்றுமே என் வாழ்வு மணம் வீசுமே -ஒளி வீசும்  சாரமற்ற உப்பானாலும் உம்மை  சார்ந்ததால் சுவை பெற்றேனே (2) பயனுள்ள உப்பாம் என்னை உரமாக்குமே  -ஒளி வீசும்  உம் தேகம் ஆகாரமா? உம் ரத்தம் சுவை நீரா? (2) உம்  வார்த்தை ஜீவனுமா? உம்மையே எனக்கு தந்தீர் -ஒளி வீசும்  Video:

ஒலிவமலை சோலையிலே - Oliva malai solaiyile Lyrics

ஒலிவமலை சோலையிலே ஒலிவமலை சோலையிலே நள்ளிரவில் தனிமையிலே  அன்பு மனம் அழுகின்றதோ..??? ஆண்டவரை தொழுகின்றதோ..?? (2)  ஆண்டவரின் சித்தமது நிறைவேறும் காலமிது (2) அன்பு மகன் மரணமது அரங்கேறும் வேளை இது... துன்ப தலம் நீங்காதோ..??  தேவப்பிதா மனம் மாறாதோ (2)  - ஒலிவமலை சோலையிலே  நெஞ்சத்திலே நினைவலைகள் நெருப்பாக எரிகின்றதோ..?? (2) சிந்தியது வெந்துருகி செந்நீரை வடிக்கின்றதோ..?? சோதனைகள் நீங்காதோ..?? இயேசு மகான் துயர் மாறாதோ..? (2)  - ஒலிவமலை சோலையிலே Video:

அருட்பெருஞ்சோதி திரு அவதாரா - Arutperunjothi thiru avathara Lyrics

அருட்பெருஞ்சோதி திரு அவதாரா   அருட்பெருஞ்சோதி திரு அவதாரா  ஏசுவே உம்மை ஸ்தோத்தரிப்பேன் (2) பரிசுத்தர் உந்தனை பாடிடுவோம்  அனுதினம் புகழ்ந்து துதித்திடுவோம்... -அருட்பெருஞ்சோதி  பாவங்கள் சுமந்து தீர்த்தவரே  எந்தன் சாபங்கள் யாவையும் மாற்றினீரே...(2) நோய் பிணி யாவும் நீக்கிட வந்தீர்...(2) நம்பிடும் மாந்தரை காப்பவரே  பரிசுத்தர் உந்தனை பாடிடுவோம்  அனுதினம் புகழ்ந்து துதித்திடுவோம்... -அருட்பெருஞ்சோதி  சோதனை வேளையில் தாங்கினீரே  என்னை தேடியே வந்து உதவி செய்தீர்...(2) நன்மைகள் என்னை சூழ்ந்திட செய்தீர்...(2) உந்தனை என்றென்றும் நான் மறவேன்  பரிசுத்தர் உந்தனை பாடிடுவோம்  அனுதினம் புகழ்ந்து துதித்திடுவோம்... -அருட்பெருஞ்சோதி    உந்தனை போலவே மாற்றிடவே தேவா... உந்தனின் சாயல் தந்தீரே...(2) மகிமையில் சேர்த்திட வந்தவர் நீரே...(2) மகிபனே உம்மை ஸ்தோத்தரிப்பேன் பரிசுத்தர் உந்தனை பாடிடுவோம்  அனுதினம் புகழ்ந்து துதித்திடுவோம்... -அருட்பெருஞ்சோதி Vi...

அன்பின் தெய்வம் - Anbin Deivam Lyrics

அன்பின் தெய்வம்   அன்பின் தெய்வம் ஆறுதல் நீரே  நம்பி வந்தேன் உந்தன் பாதத்தை  வலக்கையால் என்னை தூக்கி எடுத்து  அன்பாலே நீர் என்னை பிள்ளையாக்கி  என் பாதங்கள் இடறி விடாமல் கன்மலை மேலேன்னை நிறுத்தினீரே -  அன்பின் தெய்வம்  கர்த்தர் நீர் எந்தன் தஞ்சம் அல்லோ... அனுதினம் நான் உம்மை நம்புவேன்...(2) புது வழி  தினம் காட்டி ஆண்டு நடத்தி  ஆத்மாவில் ஆனந்தம் தந்தீரே...(2) -அன்பின் தெய்வம்  துன்பங்கள் சோதனை வந்திடினும்  நேசரே உம் மார்பில் சார்ந்திடுவேன்...(2) கண்ணின் மணி போல காக்கும் தேவன்  நம்பி வந்தேனே உமை என்றும்...(2) -அன்பின் தெய்வம்  Video:

காலையில் மலர்ந்திடும்-Kalaiyil Malarnthidum Lyrics

காலையில் மலர்ந்திடும் காலையில் மலர்ந்திடும் மாலையில் உதிர்ந்திடும்  பூவைப்போல் நம் வாழ்வு சடுதியில் மறைந்திடும்  மனிதனே நீ இன்று மண் மீது இருகின்றாய்  உன் மூச்சு நிற்குமே மண்ணுள்ளே செல்வாயே...(2) பூவுலகில் மண்ணோடு வாழ்கின்ற நீ  வானுலகில் வாழ்ந்திட என்ன செய்தாய்?...(2) மரணம் வருவதை யாரிங்கு சொல்வது  தருணம் இதுவென இறைவன் அழைப்பாரே...(2) புவிதன்னில் பிறக்கையில் அழுகின்றாய் நீ  பிரியும்போது பிறரை அழ வைகின்றாய்... துக்கம் ஏனோ துயரம் ஏனோ  கலக்கம் ஏனோ இன்று நடுக்கம் ஏனோ  இன்பம் இதே பேர் இன்பம் இதே போகும் இடம் நித்ய வீடல்லவா -காலையில் மலர்ந்திடும்  Video: