அருட்கனியே என் அகநிலவே அருட்கனியே என் அகநிலவே - என் இருளினை நீக்கிட வா அருள்மழையே என் உளமதில் மருட்சியை நீக்கிட வா 1. ஆயிரம் வாழ்த்தொலிகள் - உன்னை ஆராதனை செய்யும் தீபங்களோ ஆனந்தம் பொழிந்திட வா - இன்ப ஆறுதல் மொழிந்திட வா - இறைவா 2. நல்லறம் காப்பவனே நீ இல்லாமல் என் வாழ்வு நன்றாகுமோ ஆலயம் வாழ்பவனே உள்ள ஆறுதல் அளித்திட வா - இறைவா 3. காலமென்னும் கடலில் எம் வாழ்வென்னும் படகு நீயன்றோ வாழ்க்கையின் வழியே வா எம் வாழ்க்கை மலர்ந்திட வா - இறைவா 4. கலங்கரைச் சுடரே வா நல் காலங்கள் உருவாக்கும் தென்றலே வா நிலவிடும் அகவிருளை உன் ஒளியால் நீக்கிடவா - இறைவா