Skip to main content

Posts

Showing posts from May, 2016

எண்ணில் அடங்கா ஸ்தோத்திரம் - Ennil adanga sthothiram Lyrics

எண்ணில் அடங்கா ஸ்தோத்திரம் - தேவா எண்ணில் அடங்கா ஸ்தோத்திரம் - தேவா என்றென்றும் நான் பாடுவேன் இந்நாள் வரை என் வாழ்விலே நீர் செய்த நன்மைக்கே 1. பூமியில் வாழ்கின்ற யாவும் அதின் மேல் உள்ள ஆகாயமும் வான்தூதர் சேனைகள் யாவும் தேவா உம்மைப் போற்றுதே 2. சூரிய சந்திரரோடே சகல நட்சத்திர கூட்டமும் ஆகாயப் பறவைகள் யாவும் தேவா உம்மைப் போற்றுதே 3. காட்டினில் வாழ்கின்ற யாவும் கடும் காற்றும் பனித் தூறலும் நாட்டினில் வாழ்கின்ற யாவும் நாதா உம்மைப் போற்றுதே 4. பாவ மனுக்குலம் யாவும் தேவா உம் அன்பினை உணர்ந்தே சிலுவையின் தியாகத்தைக் கண்டு ஒயா துதி பாடுதே.

இதோ மனுஷரின் மத்தியில் - Itho manusharin mathiyil devathi lyrics

இதோ மனுஷரின் மத்தியில் தேவாதி தேவனே இதோ மனுஷரின் மத்தியில் தேவாதி தேவனே வாசம் செய்கிறாரே தேவன் தாபரிக்கும் ஸ்தலமே தம் ஜனத்தாரின் மத்தியிலாம் தேவன் தாம் அவர்கள் தேவனாயிருந்தே கண்ணீர் யாவையும் துடைக்கிறாரே தேவ ஆலயமும் அவரே தூய ஒளிவிளக்கும் அவரே ஜீவனாலே தம் ஜனங்களின் தாகம் தீர்க்கும் சுத்த ஜீவநதியும் அவரே மகிமை நிறை பூரணமே மகா பரிசுத்த ஸ்தலமதுவே என்றும் துதியுடனே அதன் வாசல் உள்ளே எங்கள் பாதங்கள் நிற்கிறதே சீயோனே உன் வாசல்களை ஜீவ தேவனே நேசிக்கிறார் சீர் மிகுந்திடுமெய் சுவிசேஷந்தனை கூறி உயர்த்திடுவோம் உம்மையே முன்னோடியாய் இயேசு பரன் மூலைக்கல்லாகி சீயோனிலே வாசஞ் செய்திடும் உன்னத சிகரமதை வாஞ்சையோடு நாம் நாடிடுவோம்.