Skip to main content

Posts

Showing posts from April, 2013

நன்றி கூறி பாடுவேன் - Nantri koori paaduven Lyrics

நன்றி கூறி பாடுவேன்   நன்றி கூறி பாடுவோம் நல்ல தேவன் இயேசுவை  அறிய செயல்கள் ஆற்றினார் போற்றுவோம்  மகிழ்ச்சியால் இதயங்கள் பொங்கி பொங்கி பாய்ந்திட  ஒரு மனதை உறவுடனே பாடிடுவோமே  v     இயேசு கூறும் நல்லுலகு நனவாகும் நாள்  வரைக்கும்  உலகினிலே நமக்கென்றும் ஓய்வில்லையே...ஓய்வில்லையே  ...(2) அன்பினிலே நீதியும் நீதியில் அன்பையும்  சமத்துவத்தில் வாழ்வையும் வாழ்வினிலே வளமையும்  இறையரசில் நாம் காண்போமே....காண்போமே...  -நன்றி கூறி பாடுவோம்  v   மனித மாண்பு எல்லோருக்கும் மலரும் நல்ல நாள் வரைக்கும்  சமுதாயம் விழிப்போடு வாழ வேண்டுமே வாழ வேண்டுமே.(2) உழைப்பிலே உயர்வையும் பகிர்வினில் உறவையும்  மனிதத்தில் புனிதமும் புனிதத்தில் மனிதமும்    இறையரசில் நாம் காண்போமே....காண்போமே.. -நன்றி கூறி பாடுவோம்  Video:

ஒவ்வொரு பகிர்வும் புனித வியாழனாம் - Ovvoru pagirvum punitha viyazhanaam Lyrics

ஒவ்வொரு பகிர்வும் புனித வியாழனாம் ஒவ்வொரு பகிர்வும் புனித வியாழனாம் ஒவ்வொரு பலியும் புனித வெள்ளியாம் ஒவ்வொரு பணியும் உயிர்ப்பின் ஞாயிராம் ஒவ்வொரு மனிதனும் இன்னொரு ஏசுவாம் நாம் நம்மையே பலியாய் கொடுப்போம் இந்த பாரினில் அவராய் வாழ்வோம் Ø     இருப்பதை பகிர்வதில் பெறுகின்ற இன்பம் எதிலுமில்லையே இழப்பதை போன்றொரு உயரிய இலட்சியம் எதிலுமே வெல்லுமே வீதியில் வாடும் நேரிய மனங்கள் நீதியில் நிலைபெறுமே (2) இதை உணர்வோம்; நம்மை பகிர்வோம் (2) இயேசுவின் கொள்கைகள் நம்மில் வாழவே Ø     பாதங்கள் கழுவிய பணிவிடை செயலே வேதமாய் ஆனதே புரட்சியை ஒடுக்கிய சிலுவை கொலையே புனிதமாய் நிலைத்ததே ஏசுவின் பலியில் இறப்பும் உயிர்ப்பும் இனையற்ற சாட்சிகளே(2) நம்மை இழப்போம் பின்பு உயிர்போம் (2) நாளைய உலகின் விடியலாகவே Video:

பாமாலை பாடிடுவோம் சவேரியாரே - Pamaalai padiduvom saveriyare Lyrics

பாமாலை   பாடிடுவோம்   சவேரியாரே Ø       நல்லகாலம் பொறந்திருச்சு, நாடும் வீடும் செழிச்சிருச்சு புனிதர் கோயில் தொரந்திருச்சு, நமக்கு புதுவாழ்வு மலர்ந்திருச்சு பாமாலை பாடிடுவோம் சவேரியாரே உங்க பாதம் தொட்டு வணங்கிடுவோம் சவேரியாரே ...(2) கொண்டாடி மகிழ்ந்திடுவோம் சவேரியாரே உமக்கு கோயில் கட்டி கும்பிடுவோம் சவேரியாரே ...(2) பாமாலை பாடிடுவோம் சவேரியாரே உங்க பாதம் தொட்டு வணங்கிடுவோம் சவேரியாரே ...(2) Ø     இயேசு சாமி வார்த்தைகளை பேசி வந்த போதகரே இறையரசின் தூதுவரே சவேரியாரே ...(2) இஞ்யாசியார் கண்டெடுத்த இயேசுசபை மாமுனியே ...(2) இறைவன் தந்த அருட்கொடையே சவேரியாரே ...(2) வாழியவே! வாழியவே! சவேரியாரே எங்கள் விசுவாச நாயகரே சவேரியாரே ...(2) பாமாலை பாடிடுவோம் சவேரியாரே உங்க பாதம் தொட்டு வணங்கிடுவோம் சவேரியாரே ...(2) Ø     கொண்டாடி மகிழ்ந்திடுவோம் சவேரியாரே உமக்கு கோயில் கட்டி கும்பிடுவோம் சவேரியாரே தென்னாட்டு பகுதியிலே கடலோர ஊர்களிலே நற்செய்தி போதித்த சவேரியாரே ...(2) நம்பி ...

ஆண்டவரை நான் போற்றிடுவேன் என்றும் - Andavarai nan potriduven song Lyrics

ஆண்டவரை நான் போற்றிடுவேன் என்றும் ஆண்டவரை நான் போற்றிடுவேன் என்றும் ஆண்டவரை நான் போற்றிடுவேன் ·            ஆண்டவரை நான் போற்றிடுவேன் என்றும் அவர் புகழை நானும் பாடிடுவேன் (2) என் ஆன்மா அவரில் பெருமைகொள்ளும் -2 எளியவர் இதைக்கேட்டு மகிழ்வாராக -2 ·            ஆண்டவரை நம்பி வாழ்வோரை சுற்றி ஆண்டவர் தூதர் என்றும் காத்திடுவார் ஆண்டவர் எவ்வளவோ இனியவரே -2 என்று சுவைத்துப்பாருங்கள் -2 ஆண்டவர் எவ்வளவோ இனியவரே என்று Video:

அலைந்திடும் உள்ளம் அமைதியில் காண்பது-Alainthidum ullam amaithiyil kanbathu Lyrics

அலைந்திடும் உள்ளம் அமைதியில் காண்பது   சரணாலயம் ! சரணாலயம் ! சரணாலயம் ! சரணாலயம் !  §     அலைந்திடும் உள்ளம் அமைதியில் காண்பது இயேசுவின் திருவடி சரணாலயம்! ...(2) அன்பினில் வாழ்ந்து துன்புறும் போதும் இயேசுவின் திருவடி சரணாலயம்! ...(2) சரணாலயம் ! சரணாலயம் ! | இயேசுவின் திருவடி சரணாலயம் !| ...(2) §     உள்ளத்தில் ஒன்றி உறைந்திடும் தெய்வம் இயேசுவின் திருவடி சரணாலயம்! ...(2) உலகினில் என்றும் நிலையான செல்வம் இயேசுவின் திருவடி சரணாலயம்! ...(2) சரணாலயம் ! சரணாலயம் ! | இயேசுவின் திருவடி சரணாலயம் !| ...(2) §     வளமையும் வாழ்வும் இணைந்திடும் போது இயேசுவின் திருவடி சரணாலயம்! ...(2) மகிழ்வினை நிறைவாய் மனங்களில் பொழியும் இயேசுவின் திருவடி சரணாலயம்! ...(2) சரணாலயம் ! சரணாலயம் ! | இயேசுவின் திருவடி சரணாலயம் !| ...(2) §     அலைந்திடும் உள்ளம் அமைதியில் காண்பது இயேசுவின் திருவடி சரணாலயம்! ...(2) அன்பினில் வாழ்ந்து துன்புறும் போதும் இயேசுவின் திருவடி சரணாலயம்! ...(...

உறவு ஒன்று உலகில் தேடி அலைந்து நான் திரிந்தேன் - Uravu ontru ulagil thedi alainthu nan thirinthen Lyrics

உறவு ஒன்று உலகில் தேடி அலைந்து நான் திரிந்தேன்   உறவு ஒன்று உலகில் தேடி அலைந்து நான் திரிந்தேன்  உறவே நீ என்றாய் அன்பு தெய்வமே - 2  உறவே வா உயிரே வா எழுந்து வா மகிழ்ந்து வா - 2 v     1. உள்ளமெனும் கோவிலில் உறவென்னும் தீபமே  வாழ்வென்னும் சோலையில் வந்திடும் வசந்தமே - 2  அன்பனே நண்பனே உன்னை அழைத்தேன் வா  ஆன்ம உணவே அருளின் வடிவே அடியேன் இல்லம் வா  உறவின் தெய்வமே என்னில் உறைந்திட வா   அன்பின் சங்கமமே என்னில் தங்கிட வா - உறவு ஒன்று   v     2. துன்பமெனும் வேளையில் அன்புடன் அணைக்கவே  துணையென வாழ்வினில் என்னுடன் தொடரவே - 2  இறைவனே இயேசுவே இதயம் எழுந்து வா  நாதனே நேசனே பாசமாய் நீ வா உறவின்... உறவின் தெய்வமே என்னில் உறைந்திட வா   அன்பின் சங்கமமே என்னில் தங்கிட வா - உறவு ஒன்று   Video:  

அழைக்கிறார் இயேசு ஆண்டவர் - Azhaikkiraar yesu andavar Lyrics

அழைக்கிறார் இயேசு ஆண்டவர் அழைக்கிறார் இயேசு ஆண்டவர் ஆவலாய் நாம் செல்லுவோம் (2) அவர் பலியினில் கலந்திட அவர் ஒளியினில் நடந்திட – 2 சாட்சிகளாய் என்றும் வாழ்ந்திட இந்நாளிலே Ø     தேடியே தேவன் வருகிறார் தன்னையே நாளும் தருகிறார் தோள்களில் நம்மைத் தாங்குவார் துயரினில் அவர் தேற்றுவார் சுமைகளை சுகங்களாக மாற்றுவார் வளமுடன் வாழும் வழியைக் காட்டுவார் (2) வாருங்கள் ஓருடலாய் இணைந்திடுவோம் வானகத் தந்தையை நாம் வணங்கிடுவோம் Ø     அன்பினால் உலகை ஆளுவார் ஆவியால் நம்மை நிரப்புவார் அமைதியை என்றும் அருளுவார் ஆனந்தம் நெஞ்சில் பொழிகுவார் விடியலின் கீதமாக முழங்குவார் விடுதலை வாழ்வை நமக்கு வழங்குவார் (2)  வாருங்கள் ஓருடலாய் இணைந்திடுவோம் வானகத் தந்தையை நாம் வணங்கிடுவோம் Video:

உலகமெல்லாம் எனக்காதாயம் என வாழ்ந்தவர் மகிழ்ந்ததில்லை - Ulagamellam enakkaathayam ena vazhnthavar lyrics

உலகமெல்லாம் எனக்காதாயம் என வாழ்ந்தவர் மகிழ்ந்ததில்லை உலகமெல்லாம் எனக்காதாயம் என வாழ்ந்தவர் மகிழ்ந்ததில்லை ஆன்மாவே எனக்காதாயம் என வாழ்ந்தால் கவலையில்லை ...(2) அழியும் செல்வம் சேர்ப்பதா! அழியா ஆன்மாவை காப்பதா! ...(2) இந்த கேள்விக்கு பதிலாய் வாழ்ந்தவர் யார்! அவரே புனித சவேரியார்! உலகமெல்லாம் எனக்காதயம் என வாழ்ந்தவர் மகிழ்ந்ததில்லை ஆன்மாவே எனக்காதாயம் என வாழ்ந்தால் கவலையில்லை ** பொன்னும் பொருளும் தேடுகிறோம்! பட்டம் பதவியை நாடுகிறோம்! ...(2) எதுவும் நிறைவு தருவதில்லை! எதிலும் மகிழ்ச்சி நிலைப்பதில்லை! |முடிவில்லாதது ஒன்றே தான்! அழிவில்லாத ஆன்மா தான்!| ...(2) உலகமெல்லாம் எனக்காதயம் என வாழ்ந்தவர் மகிழ்ந்ததில்லை ஆன்மாவே எனக்காதாயம் என வாழ்ந்தால் கவலையில்லை ** அறிவும்திறனும் அமைவதில்லை! உறவும் நட்பும் தொடர்வதில்லை! ...(2) தேடும் எதுவும் கிடைப்பதில்லை! கிடைக்கும் பலவும் நிலைப்பதில்லை! |முடிவில்லாதது ஒன்றே தான்! அழிவில்லாத ஆன்மா தான்!| ...(2) உலகமெல்லாம் எனக்காதயம் என வாழ்ந்தவர் மகிழ்ந்ததில்லை ஆன்மாவே எனக்காதாயம் என வாழ்ந்தால் கவலையில்லை அழி...